Skip to main content

அருவினை ஏதுமில்லை – சொ.பத்மநாபன்

அருவினை ஏதுமில்லை – சொ.பத்மநாபன்

so.padmanaban02
அருவினை ஏதுமில்லை
அசைவிலா ஊக்கம் பெற்றால்
திருவினை யாய்முடியும்
திருக்குறள் நூல் கற்றால்!
– அருவினை
விதிசதி எல்லாம்சாயும்
மதிவழி நாம்உழைத்தால்
கதிஎன வள்ளுவத்தைக்
கருத்தினில் நாம்பதித்தால்!
– அருவினை
பிரிவினை உணர்வகற்று
உறவினை வளர்ப்பதற்கே
நிறப்பகை தனையகற்று
அறப்பகை செழிப்பதற்கே!
உதிக்கின்ற செங்கதிர்போல்
உலகிற்கே ஒளியூட்டும்
நதிநீரைப்போல் நடந்து
நமக்கெல்லாம் பயன்கூட்டும்!
– அருவினை
உருவத்தில் அறிவுமில்லை
உயரத்தில் உயர்வுமில்லை
பருவத்தில் பூப்பதெல்லாம்
பயன்தரும் என்பதில்லை!
சிரிப்பதும் அழுவதுவும்
செயற்கையா? இயற்கையன்றோ!
பிறக்கிறோம் பெண்வயிற்றில்
பிறகிங்கு வேற்றுமை ஏன்?
– அருவினை
thirukkural_padam03-திருக்குறள் கவிஞர் சொ.பத்மநாபன்
98408 43981


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue