திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 046. சிற்றினம் சேராமை
02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 046. சிற்றினம் சேராமை
இழிகுணங்கள் நிறைந்த கூட்டத்தாரது
வழிகளில் சேராத விழிப்புணர்வு.
- சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான்,
பெரியார், சிறியார்க்கு அஞ்சுவார்;
சிறியார், சிறியார்க்கு உறவுஆவர்.
- நிலத்(து)இயல்பால், நீர்திரிந்(து)அற்(று) ஆகும்; மாந்தர்க்(கு),
நிலஇயல்பால், நீரும் திரியும்;
இனஇயல்பால், அறிவும் திரியும்.
- மனத்தான்ஆம், மாந்தர்க்(கு) உணர்ச்சி; இனத்தான்ஆம்,
மனத்தால், மனிதர்க்கு உணர்ச்சி;
இனத்தால், ‘இன்னான்’ எனப்படுவான்.
- மனத்(து)உளது போலக் காட்டி, ஒருவற்(கு).
மனத்தால் அமைதல்போல் காட்டினும்,
இனத்தால்தான், அறிவும் அமையும்.
- மனம்தூய்மை, செய்வினை தூய்மை, இரண்டும்,
மனத்தூய்மை, செயல்தூய்மை போய்ச்சேரும்
இனத்தின் தூய்மையால், வந்துசேரும்.
- மனம்தூயார்க்(கு), எச்சம்நன்(று) ஆகும்; இனம்தூயார்க்(கு),
மனத்தூயார்க்கு, விட்டுச் செல்வனவும்,
இனத்தூயார்க்கு, எல்லாமும் நல்லனஆம்.
- மனநலம், மன்னுயிர்க்(கு) ஆக்கம்; இனநலம்,
மனநலம் நல்வளர்ச்சி தரும்;
இனநலம் எல்லாப் புகழையும்.
- மனநலம், நன்(கு)உடையர் ஆயினும், சான்றோர்க்(கு),
மனநலச் சான்றோர்க்கும், மனநலம்சார்
இனநலம், பாதுகாப்புத் தரும்.
- மனநலத்தின் ஆகும், மறுமை;மற்(று) அஃதும்,
மனநலத்தார்க்கு, நல்ல மறுபிறப்பு;
இனநலம், அதனைக் காக்கும்.
- நல்இனத்தின், ஊங்கும் துணைஇல்லை; தீஇனத்தின்,
நல்இனமே, நல்துணை; தீயஇனமோ,
தீராத துன்பத் துணையே!
–பேராசிரியர் வெ. அரங்கராசன்
Comments
Post a Comment