திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 054. பொச்சாவாமை
02.பொருள் பால்
05.அரசு இயல்
அதிகாரம் 054. பொச்சாவாமை
மகிழ்ச்சியிலும், கடமை மறவாமை,
மனத்தின்கண் சோர்வு அடையாமை
- இறந்த வெகுளியின் தீதே, சிறந்த
மகிழ்ச்சியில் செயலை மறத்தல்
மிகுந்த சினத்தைவிடத், தீயது.
- பொச்சாப்புக் கொல்லும் புகழை, அறிவினை,
மறதிமை புகழையும் கொல்லும்;
வறுமை அறிவையும் கொல்லும்.
- பொச்சாப்பார்க்(கு) இல்லை புகழ்மை; அது,உலகத்(து)
‘மறதியர்க்குப் புகழ்மை இல்லை’
என்பதே நூலறிஞர் முடிவு.
- அச்சம் உடையார்க்(கு) அரண்இல்லை; ஆங்(கு)இல்லை,
அஞ்சுவார்க்குப் பாதுகாப்பும் இல்லை;
மறதியார்க்கு நல்நிலையும், இல்லை.
- முன்உறக், காவா(து) இழுக்கியான், தன்பிழை,
வரும்முன், பிழையைத் தடுக்காதான்,
வந்தபின், பெரிதும் வருந்துவான்.
- இழுக்காமை, யார்மாட்டும், என்றும், வழுக்காமை
எக்கணமும் தவறாத மறவாமையே,
ஒப்புஇல்லா ஆற்றல் ஆகும்.
- அரியஎன்(று) ஆகாத இல்லை,பொச் சாவாக்
மறவாது, விழிப்போடு செய்வார்க்கு
ஆகாத செயல்ஏதும் இல்லை.
- புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும், செய்யா(து)
புகழ்செயல்கள் செய்யார்க்கு, என்றும்
புகழ்மிகு வாழ்க்கை கிடைக்காது.
- இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக, தாம்தம்,
மகிழ்ச்சி மிகும்பொழுது, மறதியால்
கெட்டாரை எண்ணி உணர்க.
- உள்ளிய(து) எய்தல், எளிதுமன், மற்றும்,தான்
நினைத்ததை நினைத்துக்கொண்டே இருப்பின்,
நினைத்ததைப் பெறுதல் எளிது.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 055. செங்கோன்மை)
Comments
Post a Comment