திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 060. ஊக்கம் உடைமை
02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 060. ஊக்கம் உடைமை
எவ்வகைச் சூழலையும் கலங்காது,
எதிர்கொண்டு சமாளிக்கும் மனஉறுதி
- ‘உடையர்’ எனப்படுவ(து) ஊக்கம்; அஃ(து)இல்லார்,
ஊக்கம் உடையாரே, ‘உடையார்’;
மற்றையார், உடையார் ஆகார்.
- உள்ளம் உடைமை, உடைமை; பொருள்உடைமை,
ஊக்கமே, நிலைக்கும் பெரும்செல்வம்;
பொருள்செல்வமோ நில்லாது; நீங்கும்.
- ”ஆக்கம் இழந்தேம்” என்(று), அல்லாவார், ஊக்கம்,
வளநலங்களை இழப்பினும், ஊக்கத்தார்,
“இழந்தோம்” என்று கலங்கார்.
- ஆக்கம், அதர்வினாய்ச் செல்லும், அசை(வு)இலா
வளநலங்கள், வழிகேட்டுத், தளராத
ஊக்கத்தான் இடத்திற்கே செல்லும்.
- வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம்; மந்தர்தம்,
நீர்அளவே, மலர்உயரம்; மனிதர்தம்
ஊக்க அளவே, உயர்வு.
- உள்ளுவ(து) எல்லாம், உயர்(வு)உள்ளல்; மற்(று),அது
உயர்வையே, சிந்தி! தள்ளிவிட்டாலும்,
தள்ளக்கூடாத சிந்தனை அது.
- சிதை(வு)இடத்(து), ஒல்கார் உரவோர்; புதைஅம்பில்
அம்புகள் தைத்த யானைபோல்,
ஊக்கத்தார், அழிவிலும் தளரார்.
- உள்ளம் இலாதவர், எய்தார், உலகத்து,
ஊக்கம்இலார், “வள்ளல் தன்மையோம்”
என்னும், பெருமையினை, அடையார்.
- பரியது, கூர்ங்கோட்ட(து), ஆயினும், யானை
மாபெரும் யானைகூடச் சிறுபுலி
தாக்கினால் பெரிதும் அஞ்சும்.
- உரம்ஒருவற்(கு), உள்ள வெறுக்கை; அஃ(து)இல்லார்,
ஊக்கம்தான், உள்ளத்துச் செல்வம்;
ஊக்கம்இலான், ஆள்உருவில் மரமே.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 061. மடி இன்மை)
Comments
Post a Comment