திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 053. சுற்றம் தழால்
02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 053. சுற்றம் தழால்
உறவினர்க்கு வேண்டியன கொடுத்து,
அரவணைத்துக் காப்பாற்றும் உயர்பண்பு.
- பற்(று)அற்ற கண்ணும், பழைமை பாராட்டுதல்,
ஏழ்மையிலும் பழைய உறவைக்
கொண்டாடல், உறவாரிடமே உண்டு.
- விருப்(பு)அறாச் சுற்றம் இயையின், அருப்(பு)அறா
விருப்பம் குறையா உறவாரால்
அறுபடா வளநலம் அமையும்.
- அள(வு)அளா(வு) இல்லாதான், வாழ்க்கை, குளவளாக்,
மனம்கலந்து, உறவாரோடு பழகாதான்
வாழ்வில் உறவார் இரார்.
- சுற்றத்தால் சுற்றப் படஒழுகல், செல்வம்தான்,
சுற்றத்தார் சுற்றும்படி உதவுவதே,
செல்வத்தைப் பெற்றதன் பயன்.
- கொடுத்தலும், இன்சொலும், ஆற்றின், அடுக்கிய
இன்சொல் சொல்லிக் கொடுப்பாரை,
அளவுஇலாச் சுற்றத்தார் சுற்றுவார்.
- பெரும்கொடையான், பேணான் வெகுளி, அவனின்
சினவாத கொடையான் அருகில்
சுற்றத்தார் நிரம்பவே இருப்பார்.
0527. காக்கை கரவா, கரைந்(து)உண்ணும்; ஆக்கமும்,
அன்னநீ ரார்க்கே உள.
மறைக்காது பகுத்துஉண்ணும், காக்கை
போல்வார்க்கே, வளநலம் ஆகும்.
- பொதுநோக்கான் வேந்தன், வரிசையா நோக்கின்,
பொதுவாய்ப் பார்க்காமல், தகுதி
பார்க்கும் ஆள்வானுக்குச் சுற்றம்மிகும்.
- தமர்ஆகித், தன்துறந்தார் சுற்றம், அமராமைக்
பிரிந்ததன் காரணம் பிரிந்தபின்,
சுற்றத்தார் வந்து சுற்றுவார்.
- உழைப்பிரிந்து, காரணத்தின் வந்தானை, வேந்தன்,
பிரிந்த சுற்றத்தார் திரும்பிவரின்,
ஆட்சியான், ஆராய்ந்து ஏற்க.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 054. பொச்சாவாமை)
Comments
Post a Comment