Skip to main content

சீறிப் பாய்வேன் தமிழாலே! – இராம.குருநாதன்

thalaippu-kavithai

கவிதைக்கு அழிவில்லை

காற்றும் மழையும் அழித்தாலும்- என்
கவிதைக் கனலுக் கழிவில்லை
ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை- இனி
உறைக்குள் போட மனமில்லை
மண்ணும் மலையும் சரிந்தாலும்- என்
மானிடப் பார்வைக் கழிவில்லை
விண்ணும் கடலும் திரண்டாலும்- என்னுள்
விரியும் கவிதைக் கழிவில்லை
வெட்டிப் பொழுது போக்குவதை- நான்
வீணில் என்றும் கழித்ததில்லை
கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி- களத்தில்
கூர்மை வாளாய்க் களமிறங்கும்
சொல்லும் பொருளும் உள்ளவரை- என்னுள்
தொடரும் சமூகச் சிந்தனைகள்
வெல்லும் என்கவி எனச்சொல்லி
வித்தகம் பேச அறியேன்நான்
அல்லும் பகலும் கண்டவற்றை-என்
அகத்தின் காயமாய் உணர்ந்ததனால்
செல்லும் வழியைச் சீராக்கச்
சீறிப் பாய்வேன் தமிழாலே!
  • rama.gurunathanமுனைவர் இராம.குருநாதன்


Comments


  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்