திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 049. காலம் அறிதல்
02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 049. காலம் அறிதல்
செய்யத் துணிந்த செயலுக்குப்
பொருந்தும் காலத்தை ஆராய்தல்
- பகல்வெல்லும், கூகையைக் காக்கை; இகல்வெல்லும்
காக்கை, கோட்டானைப் பகல்வெல்லும்;
ஆட்சியார்க்கும் காலம் மிகத்தேவை.
- பருவத்தோ(டு) ஒட்ட ஒழுகல், திருவினைத்,
காலத்தோடு பொருந்திய செயற்பாடு,
செல்வத்தைப் கட்டிக்காக்கும் கயிறு..
- அருவினை என்ப உளவோ….? கருவியான்,
தகுகருவிகளோடு காலம் ஆய்ந்து,
செய்தால், முடியாதும் உண்டோ?
- ஞாலம் கருதினும், கைகூடும், காலம்
காலத்தை, இடத்தை ஆராய்ந்து
செய்வார்க்கு, உலகமே கிடைக்கும்.
- காலம் கருதி இருப்பர், கலங்காது,
உலகை வெல்லக் கருதுவார்.
கலங்கார்; காலத்தை ஆராய்வார்.
- ஊக்கம் உடையான் ஒடுக்கம், பொருதகர்,
ஊக்கத்தான் ஒடுங்குதல், சண்டைக்கடா,
பாயும்முன் பதுங்குதல் போலஆம்.
- பொள்என ஆங்கே புறம்வேரார், காலம்பார்த்(து),
அறிவாளர் வெளிப்படக் காட்டிக்
கொள்ளார்; காலத்தை எதிர்பார்ப்பார்.
- செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை
பகைவரைக் கண்டால், பணிக;
காலம் கனிந்தால், நிலைதலைகீழ்.
- எய்தற்(கு) அரிய(து), இயைந்தக்கால், அந்நிலையே,
அரிய நல்காலம் பொருந்தினால்,
செய்ய வேண்டியதைச் செய்துவிடு.
- கொக்(கு)ஒக்க, கூம்பும் பருவத்து, மற்(று)அதன்,
ஏற்றமீன் வந்தவுடன், குத்திஎடுக்கும்
கொக்குப்போல், காலத்தே செய்க.
–பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 050. இடன் அறிதல்)
Comments
Post a Comment