Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 033. கொல்லாமை

arusolcurai_attai+arangarasan
01. அறத்துப் பால்

03.துறவற இயல்

அதிகாரம் 033. கொல்லாமை

எவ்உயிரையும் கொல்லாது, எல்லா
உயிர்களையும் காப்பாற்றும் கொள்கை

  1. அறவினை யா(து)?எனின், கொல்லாமை; கோறல்,
     பிறவினை எல்லாம் தரும்.

கொல்லாமையே அறச்செயல்; கொல்லுதல்,
       எல்லாத் தீமைகளையும் நல்கும்.

  1. பகுத்(து)உண்டு, பல்உயிர் ஓம்புதல், நூலோர்
   தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

       பகுத்[து]உண்டு, பல்உயிர்களைக் காத்தல்,
       அறங்களுள் தலைமை அறம்.

  1. ஒன்(று)ஆக நல்லது, கொல்லாமை; மற்(று),அதன்
   பின்சாரப், பொய்யாமை நன்று.

       மொத்தத்தில் நல்அறம் கொல்லாமை;
       பொய்த்தல் இல்லாமல் பின்பற்றுக.

  1. நல்ஆ(று) எனப்படுவ(து) யா(து)?எனின், யா(து)ஒன்றும்,
    கொல்லாமை சூழும் நெறி.

  எவ்உயிரையும், கொல்லாது வாழ்தற்கு
       எண்ணுதலே நல்ல அறவழி.

  1. நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம், கொலைஅஞ்சிக்,
   கொல்லாமை சூழ்வான் தலை.

   துறந்தாருள் உயிர்க்கொலைக்[கு] அஞ்சித்
        துறந்தார் தலைமைத் துறவி.

  1. கொல்லாமை மேற்கொண்(டு) ஒழுகுவான் வாழ்நாள்மேல்,
     செல்லா(து), உயிர்உண்ணும் கூற்று.

  கொல்லாமைத் தவத்தைப் பின்பற்றுவாரை
         உயிர்உண்ணும் எமனும் நெருங்கான்.

  1. தன்உயிர் நீப்பினும், செய்யற்க, தான்,பிறி[து]
     இன்உயிர் நீக்கும் வினை.

  தன்உயிர் நீங்குநிலையிலும், மற்ற
       இன்உயிரை நீக்கக் கூடாது.

  1. நன்(று)ஆகும் ஆக்கம், பெரி(து)எனினும், சான்றோர்க்குக்,
     கொன்(று)ஆகும் ஆக்கம் கடை.

      கொலையால் வருவளநலம் இழிவு
       என்றே உயர்ந்தார் எண்ணுவார்.

  1. கொலைவினையர் ஆகிய மாக்கள், புலைவினையர்,
     புன்மை தெரிவார் அகத்து.

       இழிவினை ஆராயும் பெரியார்க்குக்,
       கொலைஞரும் இழிஞரே ஆவார்.

  1. உயிர்உடம்பின் நீக்கியார்என்ப, செயிர்உடம்பின்,
     செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

     உயிர்க்கொலை செய்வார், குற்றமும்,
       துயரும் நீங்காத இழிவாழ்க்கையார்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue