கொள்கைச் சிற்பி அண்ணா – கதி.சுந்தரம்
தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை
அறநெறியைப் பரப்புகின்ற தலைவர் அண்ணா;
அருந்தமிழர் பெருமையதை முழக்கும் வீரர்;
திறமை மிகு பேச்சுக்கோர் வடிவம் ஆவர்;
சிந்தனை சேர் எழுத்துக்கோ ஒருவர் ஆவார்;
குறள் நெறியைப் பரப்புகின்ற கொள்கைச் சிற்பி;
கூறுபுகழ்த் தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை;
உரனுடைய மனிதரெலாம் போற்றி நிற்கும்;
உயர் தலைவர் தமிழ் அண்ணா வாழ்க! வாழ்க!!
– கவிஞர் கதி.சுந்தரம்
Comments
Post a Comment