திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 048. வலி அறிதல்
02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 048. வலி அறிதல்
செயற்படும் முன்னம், எல்லாவகை
வலிமைகளின், திறன்களின் ஆய்வு.
- வினைவலியும், தன்வலியும், மற்றான் வலியும்,
செயல்வலி, தன்வலி, பகைவலி,
துணைவலி ஆராய்ந்து செய்க.
- ஒல்வ(து), அறிவ(து), அறிந்(து),அதன் கண்,தங்கிச்
முடிவதை, செயல்அறிவை ஆய்ந்து
செய்தால், முடியாததும் இல்லை.
- உடைத்தம் வலிஅறியார், ஊக்கத்தின் ஊக்கி,
ஆற்றலை அறியாது, செயற்பட்டு,
இடையில் கெட்டார் பலர்.
- அமைந்(து)ஆங்(கு) ஒழுகான், அள(வு)அறியான், தன்னை
தன்வலிக்குள் அடங்கான், அளவை
அறியான், தற்பெருமையான், கெடுவான்
- பீலிபெய் சாகாடும், அச்(சு)இறும், அப்பண்டம்,
அளவுகடந்து மயில்இறகு ஏற்றினும்,
வண்டியின் அச்சும் முறியும்.
- நுனிக்கொம்பர் ஏறினார், அஃ(து)இறந்(து) ஊக்கின்,
உச்சிக் கொம்பில் ஏறியார்,
மேன்மேலும் ஏறினால், உயிர்இழப்பர்.
- ஆற்றின் அள(வு)அறிந்(து) ஈக; அது,பொருள்
வருவாயின் அளவுஅறிந்து கொடுத்தல்
பொருட் கொடை முறைஆகும்.
- ஆ(கு)ஆ(று), அள(வு)இட்டி(து), ஆயினும், கே(டு)இல்லை,
செலவு மிகாஆயின், வரவுவழி
சிறிதுஆயினும், கேடு இல்லை.
- அள(வு)அறிந்து, வாழாதான் வாழ்க்கை, உளபோல,
அளவுஅறிந்து, வாழான், உளன்போல்
தோன்றுவான்; பின்தோன்றான்; கெடுவான்.
- உளவரை, தூக்காத ஒப்புர(வு) ஆண்மை,
செல்வ அளவுஅறியாது, பொதுக்கொடை
செய்தால், விரைவில் வளம்கெடும்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 049. காலம் அறிதல்)
Comments
Post a Comment