நான் – காரைக்குடி பாத்திமா அமீத்து
நான்
என்னுள்ளே எப்போதும்!
மனிதவாழ்வே வேண்டா
மரமாய்ப்பிறக்க வேண்டும்நான்!
இளைப்பாறநிழல் கொடுத்து
இனியகனிகள் அளித்து,
பறவைகள் கூடமைத்துவாழ
பாதுகாப்பளித்திட வேண்டும்நான்!
நீராகநான்மாறி உயிர்களின்
வேட்கைதீர்த்திட வேண்டும்நான்!
காற்றாகமாறி அனைவரின்
மூச்சாக வேண்டும்நான்!
கல்லாகமாறி உளியால்
சிலையாக வேண்டும்நான்!
அலையாகமாறிப் பெருங்கடலில்
சங்கமிக்க வேண்டும்நான்!
மலராய்ப் பிறந்து
மணம்தந்து உதிரவேண்டும்நான்!
நிலவாய் உதித்து
வளர்ந்து தேயவேண்டும்நான்!
கடவுளோர்நாள் வந்தென்னிடம்
கண்முன்னே தோன்றினால்,
ஈசலாகப் பிறந்து
ஓர்நாளில் பிறந்துமடியும்
வரமொன்று கேட்பேன்
நான்…..நான்!
நான்,
காரைக்குடி பாத்திமா அமீத்து,
காரைக்குடி பாத்திமா அமீத்து,
சார்சா
தரவு முதுவை இதாயத்து
அழகு! அழகு!!
ReplyDelete