Skip to main content

கலக்கமில்லா இலக்குவனார் – கவியோகி சுத்தானந்த பாரதியார்


கலக்கமில்லா இலக்குவனார் – கவியோகி சுத்தானந்த பாரதியார்

   ilakkuvanar+05
 அலக்கண் வரினும் கலக்கமின்றி
செந்தமிழ்க் கொடியை முந்துறத் தாங்கி
தன்மானத்தைப் பொன்னெனக் காத்த
நுண்மாண் புலவர்; நூல்பல பயின்று
நன்மாணவரை நன்கு பயிற்றி
வீரத் தமிழர்வெற்றிப் படையை
ஊக்கிய செம்மல் உள்ளத் துடிப்பெலாம்
நந்தமிழ் வாழ்கென நடக்கும் புரவலர்
இலக்குவனாரின் இலக்கணச சிறப்பும்
தனித்தமிழ்க் கொஞ்சும் இனித்த நடையும்
நிமிர்ந்த வீறும் அமைந்த சீரும்
எண்ணிஎண்ணி ஏத்திடுவோமே!
– கவியோகி சுத்தானந்த பாரதியார்
kaviyogi_suthananthabharathiyar01

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்