Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 038. ஊழ்


arusolcurai_attai+arangarasan
01. அறத்துப் பால்
04. ஊழ் இயல்
அதிகாரம் 038. ஊழ்

உலக இயற்கை முறைமைகளை,  
உணர்ந்து, தக்கபடி நடத்தல்ஆம்.

  1. (கு)ஊழால், தோன்றும் அசை(வு)இன்மை; கைப்பொருள்,
   போ(கு)ஊழால் தோன்றும் மடி.

  ஆகுசூழல் ஊக்கத்தால், பொருள்ஆம்;
       போகுசூழல் சோம்பலால் பொருள்போம்.

  1. பேதைப் படுக்கும், இழ(வு)ஊழ்; அறி(வு)அகற்றும்,
   ஆகல்ஊழ் உற்றக் கடை.

  அழிவுச் சூழலில் அறியாமைஆம்
       ஆக்கச் சூழலில் அறிவுஆம்.

  1. நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும்,தன்
    உண்மை அறிவே மிகும்.

நுண்நூல்கள் கற்றார்க்கும் அவர்தம்
       உண்மையான அறிவே மேலோங்கும்.

  1. இருவே(று), உலகத்(து) இயற்கை; திருவேறு,
   தெள்ளியர் ஆதலும் வேறு.

       உலகத்[து] இயற்கை, இருவகை;
       செல்வமும், அறிவும் வேறுவேறு.

  1. நல்லவை எல்லாம் தீயஆம்; தீயவும்
     நல்லஆம், செல்வம் செயற்கு.

  செல்வம் செய்யும்போது, நல்லவை
       தீயஆகும்; தீய நல்லஆகும்.


  1. பரியினும், ஆகாஆம் பால்அல்ல; உய்த்துச்
     சொரியினும், போகா தம.

இயற்கைக்[கு] எதிரானதை ஆக்கல்,
       உடன்பட்டதைப் போக்கல் முடியாது.  

  1. வகுத்தான் வகுத்த வகைஅல்லால், கோடி
     தொகுத்தார்க்கும், துய்த்தல் அரிது.

  கோடிகள் இருந்தாலும் இயல்புக்[கு]
       ஏற்பத்தான், நுகரவும் முடியும்.

  1. துறப்பார்மன், துப்புர(வு) இல்லார்? உறல்பால,
     ஊட்டா கழியும் எனின்.

       நுகர்தற்குப் பொருள்கள் கிடைக்காத
       போதுதான், துறப்பரோ சிலர்?

  1. நன்(று)ஆம்கால், நல்லஆக் காண்பவர், அன்(று)ஆம்கால்,
     அல்லல் படுவ(து) எவன்?

    நல்லவை ஆம்போது இன்புறல்,
       தீயவை ஆம்போது துன்புறல் ஏன்?

  1. ஊழின் பெருவலி யாஉள? மற்(று)ஒன்று
     சூழினும், தான்முந்(து) உறும்.

       ஊழ்போல் வலியன உளவோ?
       முந்துவதை, அஃது முந்தும்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue