Skip to main content

உறவாடும் தீயே நீ வாழ்க! – சுடர் விழி



உறவாடும் தீயே நீ வாழ்க! 

– சுடர் விழி


eezham_maaveerar vanakkam
நெருப்பாகி,நெருப்பாகி,
நெருப்பாகி நிமிர்வோம்..
உயிப்போடு,பொறுப்போடு,
விருப்போடு நிமிர்வோம்..
நெஞ்சினில் எரியும் தீயே,
ஈரம் தருவதும் நீயே..
கண்ணீர் மழையைத் தடுப்போம்..
கல்லறை வேதம் படிப்போம்..
தூங்கும் வீரர் கணவுகளில்,
தாங்கும் எங்கள் மனசுகளில்,
தேசத் தாயே நீ வருவாய்!
திசைகள் வெடிக்க ஒளி தருவாய்!
தலைவன் உரையைக் கேட்ககும் பொழுதே,
தலைகள் மெல்ல உயரும்
மலழைமுகங்கள் மௌனம் எழுத,
மணியும்,ஒலியும் உலவும்
தீயின் புதல்வச் சுடராய் மாற,
தியாக வேள்வி தொடரும்
துயிலும் இல்லப் பாடல் இந்த,
தேகம் முழுக்கப் பரவும்
பொறுப்புகள் சுமந்த நெஞ்சம்,
பொங்கி அழுதால் தீருமா?
போர்க்கலை விதைத்து நின்றோம்,
இதயம் என்ன ஆறுமா?
நெருப்பபே உன்னை,
நாங்கள் என்றும்,” உயிராக” நேசித்தோம்..
நீ தானே எங்கள் மூச்சு,
என்று நாளும் பூசிப்போம்..
மாவீரர் சுடராகி,
மனத்திற்குள் படமாகி
உறவாடும் தீயே நீ வாழ்க!
உறவாடும் தீயே நீ வாழ்க!
சுடர் விழி
(அகரமுதல 107   கார்த்திகை 10, 2046 / நவ. 26, 2015)
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்