திருக்குறள் அறுசொல் உரை –076. பொருள் செயல் வகை : வெ. அரங்கராசன்
02. பொருள் பால்
09. பொருள் இயல் (கூழ் இயல்)
அதிகாரம் 076. பொருள் செயல் வகை.
செல்வத்தின் தன்மை, தேவை,
சிறப்பு, திரட்டும் வழிமுறைகள்.
- பொருள்அல் லவரைப், பொருள்ஆகச் செய்யும்
மதிப்பு இல்லாரையும், மதிப்பு
உள்ளாராக மாற்றுவது செல்வமே.
- இல்லாரை, எல்லாரும் எள்ளுவர்; செல்வரை,
செல்வம் இல்லாரை, எல்லாரும்
இகழ்வார்; உள்ளாரைச் சிறப்பிப்பார்.
- பொருள்என்னும் பொய்யா விளக்கம், இருள்அறுக்கும்
செல்வம்எனும் நிலைவிளக்கு எங்கும்
செல்லும்; ஏழ்மைஇருளைக் கொல்லும்.
- அறம்ஈனும், இன்பமும் ஈனும், திறன்அறிந்து
தீதுஇலாது வருசெல்வம், அறவாழ்வும்,
தீரா இன்பமும் தரும்.
- அருளொடும், அன்பொடும், வாராப் பொருள்ஆக்கம்
அருள்,அன்பு பொருந்தாது வரும்பொருள்
பெருக்கைப், பொருந்தாது விடு.
- உறுபொருளும், உல்கு பொருளும்,தன் ஒன்னார்த்
வரிப்பொருளும், சுங்கமும், பகைவர்வழிப்
பொருளும் அரசுப் பொருள்.
- அருள்என்னும் அன்(பு)ஈன் குழவி, பொருள்என்னும்
அன்புத்தாயின் அருட்குழந்தை, செல்வம்எனும்
வளர்ப்புத் தாயால் வளரும்.
- குன்(று)ஏறி, யானைப்போர் கண்(டு)அற்(று)ஆல், தன்,கைத்(து)ஒன்(று)
கைப்பொருள் கொண்டு செயல்செய்தல்,
குன்றுஏறி, யானைப்போர் காணல்போல்.
- செய்க பொருளைச், செறுநர் செருக்(கு)அறுக்கும்
பகைவர்தம் ஆணவத்தை அழிக்கும்
கருவிஆம், செல்வத்தைப், பெருக்கு.
- ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்(கு), எண்பொருள்
அறவழி வருநிறை பொருளே,
அறமும், இன்பமும் நிரப்பும்.
பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 077. படை மாட்சி)
Comments
Post a Comment