திருக்குறள் அறுசொல் உரை – 093. கள் உண்ணாமை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 092. வரைவின் மகளிர் தொடர்ச்சி)
02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 093. கள் உண்ணாமை
நல்உணர்வு, உடல்நலம், செல்வம்
அழிக்கும் கள்ளைக் குடிக்காமை.
- உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும்
கள்ளைக் காதலிப்பார் எப்போதும்
அஞ்சப்படார்; புகழையும் இழப்பார்.
- உண்ணற்க கள்ளை; உணில்உண்க, சான்றோரால்
கள்ளைக் குடிக்காதே; பெரியார்தம்
மதிப்பு வேண்டாம்எனில், குடிக்க.
- ஈன்றாள் முகத்தேயும், இன்னா(து)ஆல், என்மற்றுச்
கள்குடியாரைத் தாயே வெறுப்பார்;
உயர்ந்தாரிடத்தில், என்ன ஆவார்?
- “நாண்என்னும் நல்லாள்” புறம்கொடுக்கும், கள்என்னும்
“நாணம்எனும் நல்லாள்” மதுக்குடிப்
பெரும்குற்றத்தார் முன்னர் நில்லாள்.
- கைஅறி யாமை உடைத்தே, பொருள்கொடுத்து,
விலைதந்து, தம்நிலை மறப்பை
வாங்கல், ஒழுக்கத்தை அறியாமை.
- துஞ்சினார் செத்தாரின் வே(று)அல்லர், எஞ்ஞான்றும்
உறங்குவாரும், கள்என்னும் நஞ்சைக்
குடிப்பாரும் செத்தார் போன்றாரே.
- உள்ஒற்றி, உள்ளூர் நகப்படுவர், எஞ்ஞான்றும்
குடித்தார் மனத்திலிருந்து வெளிப்படும்
உளறல் கேட்டார் சிரிப்பார்.
- “களித்(து)அறியேன்” என்பது கைவிடுக, நெஞ்சத்(து)
“குடிக்கவில்லை” என்னாதே; உள்ஒளித்ததை
உள்சென்ற கள்ளே வெளிக்காட்டும்.
- களித்தானைக் காரணம் காட்டுதல், கீழ்நீர்
குடியரைத் திருத்தல், நீருக்குள்
விழுந்தானை விளக்கால் தேடல்போல்.
- கள்உண்ணாப் போழ்தில், களித்தானைக் காணும்கால்,
குடிக்காப்போது, குடியின் இழிவைக்
கண்டும், குடியர் சிந்தியாரோ?
பேரா.வெ.அரங்கராசன்
(அதிகாரம் 094. சூது.)
Comments
Post a Comment