Skip to main content

தமிழ்மொ ழியால் ஓதி நீ தொண்டு செய்! – நாமக்கல் கவிஞர்

இளந்தமிழனுக்கு நாமக்கல் கவிஞர் வேண்டுகோள் : ilanthamizhan-naamakkal-kavignar

3,4 / 6

இளந்தமிழனுக்கு

அன்பி னோடும் அறிவு சேர்ந்த
ஆண்மை வேண்டும் நாட்டிலே;
அச்ச மற்ற தூய வாழ்வின்
ஆற்றல் வேண்டும் வீட்டிலே.
இன்ப மான வார்த்தை பேசி
ஏழை மக்கள் யாவரும்
எம்மு டன்பிறந்த பேர்கள்
என்ற எண்ணம் வேண்டும்.
துன்ப மான கோடி கோடி
சூழ்ந்து விட்ட போதிலும்
சோறு தின்ன மானம் விற்கும்
துச்ச வாழ்வு தொட்டிடோம்!
என்ப தான நீதி யாவும்
இந்த நாட்டில் எங்கணும்
இளந்த மிழா! என்றும் நின்றே
ஏடெ டுத்துப் பாடுவாய்!       3

பணமி ருந்தார் என்ப தற்காய்ப்
பணிந்தி டாத மேன்மையும்
பயமு றுத்தல் என்ப தற்கே
பயந்தி டாத பான்மையும்
குணமி ருந்தார் யாவ ரேனும்
போற்று கின்ற கொள்கையும்
குற்ற முள்ளார் யாரென் றாலும்
இடித்துக் கூறும் தீரமும்
இனமி ருந்தார் ஏழை யென்று
கைவி டாத ஏற்றமும்
இழிகு லத்தார் என்று சொல்லி
இகழ்ந்தி டாமல் எவரையும்
மணமி குந்தே இனிமை மண்டும்
தமிழ்மொ ழியால் ஓதி நீ
மாநி லத்தில் எவருங் கண்டு
மகிழு மாறு சேவை செய்.       4
(தொடரும்)
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015)

Comments

  1. பணமி ருந்தார் என்ப தற்காய்ப்
    பணிந்தி டாத மேன்மையும் (மேன்மையும்)
    பயமு றுத்தல் என்ப தற்கே
    பயந்தி டாத பான்மையும் (பான்மையும்)
    குணமி ருந்தார் யாவ ரேனும்
    போற்று கின்ற கொள்கையும் (கொள்கையும்)
    குற்ற முள்ளார் யாரென் றாலும்
    இடித்துக் கூறும் தீரமும் (தீரமும்)
    இனமி ருந்தார் ஏழை யென்று
    கைவி டாத ஏற்றமும் (ஏற்றமும்)
    இழிகு லத்தார் என்று சொல்லி
    இகழ்ந்தி டாமல் எவரையும்
    மணமி குந்தே இனிமை மண்டும்
    தமிழ்மொ ழியால் ஓதி நீ
    மாநி லத்தில் எவருங் கண்டு
    மகிழு மாறு சேவை செய்.

    இதில், மேன்மையும் பான்மையும் கொள்கையும் தீரமும் ஏற்றமும் என உம்மைபெற்று தொடர்ந்துவருகின்ற இவற்றிற்கான பொருளானது எங்கும் முடிவுறாமலேபோய்விட்டிருப்பதைப்பாருங்கள்.

    'மேன்மையும் பான்மையும் கொள்கையும் தீரமும் ஏற்றமும் வேண்டும்' என்றோ ஆல்லது கவிஞர் விரும்பியபடியோ இவற்றுக்கான பொருள் முடிந்திருக்கவேண்டாமோ?

    இழிகு லத்தார் என்று சொல்லி
    இகழ்ந்தி டாமல் எவரையும்
    மணமி குந்தே இனிமை மண்டும்
    தமிழ்மொ ழியால் ஓதி நீ
    மாநி லத்தில் எவருங் கண்டு
    மகிழு மாறு சேவை செய்

    என்னும்வரிகளுக்கும் இந்தவரிகளுக்கு முன்னுள்ளவரிகளுக்கும் தொடர்பில்லாமலிருப்பதைப்பாருங்கள்.

    எவையேனும் வரிகள் விடுபட்டிருக்கின்றனவா?

    ReplyDelete
  2. அன்புடையீர்,
    உங்கள் கூரிய பார்வைக்குப் பாராட்டுகள்.

    இதனைப் படிக்கும் பொழுது தவறு நேர்ந்துள்ளதாக எண்ணி அடிகளை எண்ணிப் பார்த்தேன். பின்னர் இணையத்தில் பாடலைத் தேடினேன். இணையக்கல்விக்கழகத்திலும் பிற பதிவுகளிலும் இவ்வாறுதான் உள்ளது. எங்கும் அச்சில் தவறு நடந்து அதுவே இணையத்தில் ஏற்றப்பட்டுப் பின்னர் மிகுதியாகப் பகிரப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.
    நன்றி. அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி/

    ReplyDelete
  3. அன்புடையீர்,

  4. அன்புடையீர்,

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்