திருக்குறள் அறுசொல் உரை – 092. வரைவின் மகளிர் : வெ. அரங்கராசன்

kuralarusolurai_mun attai

02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 092. வரைவின் மகளிர்.


பொருள்விருப்பால் மட்டுமே, பலரை
விரும்பும் திருமணம்ஆகா மகளிர்.
  1. அன்பின் விழையார், பொருள்விழையும் ஆய்தொடியார்,
     இன்சொல் இழுக்குத் தரும்.
     அன்புஇன்றிப் பொருள்கள் விரும்பும்
       பரத்தையின் இன்சொல் இழிவுதரும்.    

  1. பயன்தூக்கிப், பண்(பு)உரைக்கும் பண்(பு)இல் மகளிர்,
     நயன்தூக்கி, நள்ளா விடல்.
     பெறுபயன் ஆய்ந்து பண்போடு
       பேசும், பரத்தையரை நெருங்காதே.     

  1. பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்(டு)அறையில்
     ஏ(து)இல் பிணம்தழீஇ அற்று.
     பரத்தையின் பொய்த்தழுவல் இருள்நிறை
       அறையில் பிணத்தைத் தழுவல்போல்.

  1. பொருள்பொருளார் புல்நலம் தோயார், அருள்பொருள்
   ஆயும் அறிவி னவர்.
      பொருள்ஆயும் பரத்தை இன்பத்தை
       அருள்ஆயும் அறிவார் பொருந்தார்.

  1. பொதுநலத்தார் புல்நலம் தோயார், மதிநலத்தின்
   மாண்ட அறிவி னவர்.
     பொதுஇன்பக் கீழ்மை மகளிரை,
       மதிநலம் மிக்கார் தழுவார்.

  1. தந்நலம் பாரிப்பார் தோயார், தகைசெருக்கிப்,
     புல்நலம் பாரிப்பார் தோள்.
     அழகுச் செருக்குமிகு பரத்தையைத்,
       தம்நலம் வளர்ப்பார், தீண்டார்.

  1. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர், பிறர்நெஞ்சில்
     பேணிப் புணர்பவர் தோள்.
      பல்லார் நெஞ்சு புகுபரத்தையரைக்,
       மனஉறுதி இல்லார், தழுவுவார்.
  1. ஆயும் அறிவினர் அல்லார்க்(கு), அணங்(கு)என்ப,
     மாய மகளிர் முயக்கு.
     மாயப் பரத்தையர் தழுவலுக்கு,
       ஆராய்ச்சி இல்லார் மயங்குவார்.

  1. வரை(வு)இலா மாண்இழையார் மென்தோள், புரைஇலாப்
     பூரியர்கள் ஆழும் அளறு.
     ஒழுக்கம்இலாப் பரத்தையின் தோள்இன்பம்,
       கீழோர் மூழ்கும் புதைகுழி.

  1. இருமனப் பெண்டிரும், கள்ளும், கவரும்,
     திருநீக்கப் பட்டார் தொடர்பு.
    பரத்தைமையும், கள்ளும் ,சூதும்.      
         செல்வத்தால் நீக்கப்பட்ட தொடர்புகள்.
பேரா.வெ.அரங்கராசன்
பேரா.வெ.அரங்கராசன் :ve.arangarasan
(அதிகாரம் 093. கள் உண்ணாமை



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue