Skip to main content

நிலையாய் வாழ்பவர்க்கு ஏதடா அழிவு? – செந்தமிழினி பிரபாகரன்

மாவீரர் துயிலும் இல்லம்

புதைக்கப் புதைக்கவே எழுகின்றோம்!

கல்லறைகளைத்
தகர்த்து எறிந்தால்..
மண்ணுக்குள்
உயிரோடு
புதைத்து
மண்ணோடு மண்ணாக
உக்கி உருக்குலைத்தால்..
மனங்களை விட்டு
மறைந்து
போகுமா
மாவீரம்????
மூடரே!
பொறிக்கப்பட்ட
உணர்வுகளைப்
பொறி கக்கும்
தீத் துளிகளாய்
நெஞ்சுக்குள்
சூல் கொண்டு
நிலையாய்
வாழ்பவர்க்கு
ஏதடா அழிவு?
நெஞ்சுக்குள்
எரியும்
தீயாக,
தமிழர்
உள்ளத்தில்
கனன்றெழும்
வேட்கையாக ,
கந்தக
மேனியர்
உயிர் கொண்டு
வாழ்வதை
காடையர்
நீர்
அறிய மாட்டீர்!
புதைக்கப்
புதைக்கவே
நாம்
விதையாய்
எழுகின்றோம்!.
அழிக்க அழிக்கவே
நாம்
செழித்தோங்கி
வளர்கின்றோம்!
தடைகளே
தகர்க்கத் துடிக்கும்
பகைகளே
வாரும்!
வந்து எம்மை
எச்சமின்றித்
தடை செய்யும்!
மிச்சமின்றி
தகர்த்தெறியும்!
எச்சரிக்கின்றோம்!!!
நாம்
மூச்செறிக்கும்
முன்
கொட்டமடித்து
ஆடி முடியும்!
நாங்கள்
வீறு
கொண்டு
எழு முன்
எமை
அழித்து
முடியும்!
ஏனென்றால்…
உங்கள்
விழி காணா
எச்சத்தின்
மிச்சத்
துகளில்
இருந்து
நாம்
பொறி பற்றி
படரும்
காட்டுத்
தீயாக
அழிப்பு ஆற்றலாக
உரு மாறும்
காலம்
நாளை
வரலாம்..
அன்று
அழிவைத் தாங்க
உங்களால்
முடியாது!!!
அநீதியைப்
பொசுக்கும்
ஊழித்தீயாய்
மாவீரர்
எம்முள்
வாழ்வதறியாத
முட்டாள்களே!
நாம்
அழிவுகளில்
இருந்து
மூண்டெழும்
தமிழினம்!
குறித்து
வைத்துக் கொள்ளுங்கள்!
எங்கள்
மீண்டெழும் எழுகை
வரலாற்றை
காலங்கள்
குறிப்பெடுக்கும்
என்றோ
ஒரு நாள்
காலங்களை
நாம் குறிக்கும்
காலம் வரும்!
அது
வரை..
விழ விழ
எழும்
இனமாய்
மீண்டெழ
எங்கள்
வேர்களுக்கு
நீர் வார்க்க
எம்மைத்
தடை
செய்து
தகர்த்தெறியும்!
senthamizhini-prapakaran03


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue