திருக்குறள் அறுசொல் உரை – 082. தீ நட்பு : வெ. அரங்கராசன்
02. பொருள் பால்
11. நட்பு இயல்
அதிகாரம் 082. தீ நட்பு
தீப்போன்று, கொடிய பேர்அழிவுதரு
தீமையான நட்போடு சேராமை.
- பருகுவார் போலினும், பண்(பு)இலார் கேண்மை
பண்புஇலார் போலித் தீநட்பு
நிறைதலினும், குறைதல் இனிது.
- உறின்நட்(டு), அறின்ஒரூஉம், ஒப்(பு)இலார் கேண்மை,
பெறும்போது, ஓங்கும்; அறும்போது,
நீங்கும் தீநட்பு எதற்கு?
- உறுவது சீர்தூக்கும் நட்பும், பெறுவது
பெறுவதை ஆராய்வாரும், தருவதைப்
பெற்றுக் கொள்வாரும் கள்வரே.
- அமர்அகத்(து), ஆற்(று)அறுக்கும் கல்லாமா அன்னார்
நடுவழியில் கைவிடும் நட்பினும்,
தனிமை தலைநிலை இனிமை.
- செய்(து)ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை,
நல்நட்பைச் செய்தும், காத்துக்கொள்ளாச்
சிறியார் இழிநட்பை ஒழி.
- பேதை பெரும்கெழீஇ நட்பின், அறி(வு)உடையார்
அறியார் பெருநட்பினும், அறிவார்
பகைமையே, மிகவும் நன்று.
- நகைவகையர் ஆகிய நட்பின், பகைவரால்
முகத்துஅளவில் சிரிக்கும் நட்பினும்,
பகைமையே, மிகவும் நன்று.
- ஒல்லும் கருமம், உடற்று பவர்,கேண்மை
‘முடியும் செயலை முடியாது’என
மொழிவார் நட்பை நழுவவிடு.
- கனவினும் இன்னாது மன்னோ….? வினைவேறு
செயல்வேறு, சொல்வேறு கொண்டார்தம்
தீநட்பு கொடியது அன்றோ….?
- எனைத்தும் குறுகுதல் ஓம்பல், மனைக்கெழீஇ,
வீட்டில், புகழ்நட்பு; வெளியில்,
பழிப்பு; நெருங்காமை, சிறப்பு.
பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகார 083. கூடா நட்பு)
Comments
Post a Comment