Skip to main content

துணிவு இழந்தவனுக்குச் சுண்டுவிரல்கூட எதிரிதான்

துணிவு : thunivu 

துணிவு   

துணிந்தவனுக்குக்
கடலின் ஆழம்கூட
ஒரு சாண் வயிறு
துணிவு இழந்தவனுக்கு
மண்பானையின் ஆழம்கூட
கடலின் ஆழம் என்பான்…
துணிந்தவனுக்கு
தலையெழுத்து ஒரு தடையில்லை..
துணிவு இழந்தவனுக்கு
அவன் சுண்டுவிரல்கூட எதிரிதான்
துணிந்தவனுக்கு
ஒரு முறை மரணம்..
துணிவு இழந்தவனுக்கு
நித்தம் நித்தம் மரணம்..
தவற்றைக் களையெடு
சேமிப்பை விதைபோடு
நீயும் துணிந்தவன்தான்
வாழ்க்கையென்னும்
பக்கத்தில்
துணிந்தவன்
வீழ்ந்தாலும் எழுவான்..
துணிவு இழந்தவன்
எழுந்து எழுந்து
வீழ்ந்துகிடப்பான்..
அகக்கண் திறங்கள்
துணிவு பிறக்கும்
புறக்கண் துறந்துவிடுங்கள்..
ஆக்கம் பிறக்கும்..
ஏன் என்ற கேள்வி
பிறக்காவிடில்
பிறக்காமலேயே
இறந்துவிடுகிறது
துணிவு!
துணிவு
தூரத்துச் சொந்தம் இல்லை..
உன் அருகில் வைத்துக்கொள்..
துணிந்து செல்.. நிமிர்ந்து நில்..
வெற்றியின் மறைபொருள்
துணிவில்தான் பிறக்கும்!
துணிவில்தான் பிறக்கும்!
என்றும் அன்புடன்  
இரா. ந. செயராமன் ஆனந்தி  
கீழப்பெரம்பலூர்
இருப்பு : துபாய்
 050 7258518
தரவு : முதுவை இதாயத்து


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்