Skip to main content

மானமிகு மறவன் இலக்குவனார் ! – மா. கந்தையா –செயா

 பேராசிரியர் சி.இலக்குவனார்: s.Ilakkuvanar 

தோற்றம்: கார்த்திகை 01, 1940 / நவம்பர் 17, 1909

மறைவு ஆணி 18, 2004 / செத்தம்பர் 03, 1973


மானமிகு  மறவன்  இலக்குவனார் !

ஏனத்தைத்  தூக்கிக்கல்லுக்கு  எழுச்சிப்பா  பாடும்மண்ணில்
வானத்தை நோக்கி வணங்கி வழியனுப்பும்மன
ஊனமுற்றோர் உலவிடும் ஈனமனத்தாரை இனமொதுக்கி
வானமே வீழ்ந்தாலும் தான்வீழா தகைமையாளர் !
” அள்ளிக்கொள் அருந்தமிழைவிலை சொல்லிக்கொடு ” எனப்பெரும்
புள்ளிகள் கூறும்போதுஎரி கொள்ளியால் சுட்டெரிப்பார் .
வெள்ளிநிற மீசைமேலுதட்டில் துள்ளித்துடிக்கும் சினம்கொண்டால்
அள்ளி யணைத்துத்தமிழை சொல்லிவளர்ப்பதில் தாயாவாள் !
வாய்மையே வெல்லுமென்ற வள்ளுவன் சொல்லை
தூய்மை  மனத்துடன்  தூயதமிழகத்தின்  இலாஞ்சனையாக
சேய்மை நாட்டினரும்  செவிகேட்டு  மகிழச்செய்த
வாய்மை  மேட்டுப்பெரியோன்   வந்துபிறந்த நாள்இன்று ! (17)
பிறந்தநாள் அதுஓர்  சிறந்தநாள்உண்  மைத்தமிழர்க்கு
உறைந்த  நாளெல்லாம்  உறுபொருளை  இழப்பினும்
இறைத்த  செல்வமெலாம்  இன்தமிழ்  வளர்ச்சிக்கேஎன
நிறைந்த  மனத்துடன்இந்   நிலஉலகில்  வாழ்ந்தவர் !
காசுதான்  வாழ்க்கைஎனப் பேசுவர்எனிலது  என்கால்எழும்
தூசுக்கு  நேர்என்பார் ;  காசுதான்என்   றால்நாட்டில்
கணிகை யின்உடல்  வணிகத்தால்கை  நிறைந்திருக்கும்
வணிகம்  வள்ளுவன்  வகுத்தவழி  வேண்டுமென்பார் !
ஒருநூறோ டாறாவது  பிறந்தநாள்    இன்று !
திருவான  செந்தமிழ்ப்  போராளியின்  பிறந்தநாளிலவர்
உருவை மனத்திலுன்னி  மருஇல்லாத்  தலைமுறைக்கு
கருவாய்  விளங்கிடக்  கண்மூடி  வணங்குவோம்.!
     
    அன்புடன் –அணுக்கத்  தொண்டன்
       மா.  கந்தையா – செயா
       மின்வரி –  ilayavanjeya@gmailcom
ilaiyavanseyaa-kanthaiyaa


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்