திருக்குறள் அறுசொல் உரை – 080. நட்பு ஆராய்தல் : வெ. அரங்கராசன்
02. பொருள் இயல்
11. நட்பு இயல்
அதிகாரம் 080. நட்பு ஆராய்தல்
வாழ்க்கை முழுதும் கூடவரும்
ஆழ்நட்பை, ஆராய்ந்து ஏற்றல்.
- நாடாது நட்டலின் கே(டு)இல்லை; நட்டபின்,
ஆராயா, நட்பு கேடு; ஏன்எனில்,
நட்புக்குப்பின் விடுபடல் கடினம்.
ஆய்ந்(து)ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை,
தான்சாம் துயரம் தரும்.
ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் நட்பு,
இறுதியில் சாவுத் துன்பம்தான்.
- குணனும், குடிமையும், குற்றமும், குன்றா
நல்பண்பு, குடிப்பிறப்பு, குற்றம்,
நிறைஇனம், ஆராய்ந்து நட்புகொள்.
- குடிப்பிறந்து, தன்கண் பழிநாணு வானைக்,
நல்குடிப் பிறந்து, பழிநாணுவானை,
எதுகொடுத்தும், நண்பன் ஆக்கு.
- அழச்சொல்லி, அல்ல(து) இடித்து, வழக்(கு)அறிய
கண்ணீர்விட்டுச் சொல்லியோ, கண்டித்தோ,
வழிகாட்டுவானை நண்பன் ஆக்கு,
- கேட்டினும், உண்(டு)ஓர் உறுதி; கிளைஞரை,
கெடுதியிலும் உண்டாகும் நன்மை,
நண்பரை அளந்துகாட்டும் அளவுகோல்.
- ஊதியம் என்ப(து), ஒருவற்குப் பேதையார்
அறிவுஇலார் நட்பைக் கைவிடலே,
ஒருவனுக்கு நன்மையைத் தரும்.
- உள்ளற்க, உள்ளம் குறுகுவ; கொள்ளற்க,
குறுகியதை உள்ளாதே; துன்பத்தில்
கைவிடுவார் நட்பைக், கொள்ளாதே.
- கெடும்காலை கைவிடுவார் கேண்மை, அடும்காலை
கெடுதியில் கைவிடும் தீநட்பு,
சாகும்போது நினைத்தாலும் சுடும்.
- மருவுக, மா(சு)அற்றார் கேண்மை; ஒன்(று)ஈத்தும்
வேண்டியது கொடுத்துத் தூயநட்பை
ஆக்கு; தீயநட்பை நீக்கு;
பேராசிரியர் வெ. அரங்கராசன்
Comments
Post a Comment