நல்லெழுத்தை மாற்றுவதோ? – க.தமிழமல்லன்


script_murderer_ezhuthukolaikaarargal
எழுத்தைச் சிதைப்போர் எச்சிலுக்(கு)ஒப்பு
  1. தமிழடிமை நீக்கார் தமிழ்த்திருத்தம் செய்வர்
  உமிழ்கின்ற எச்சிலுக்(கு)ஒப்பு.
  1. எழுத்துத் திருத்தம் இனிமேலும் செய்தால்
  கழுத்து முறிந்துவிடும் காண்.
  1. குறிக்கோள்கள் இல்லாமல் நம்எழுத்தை மாற்றும்
  அறிவில்லார் செய்கொடுமை ஆய்.
  1. அடியோடு மாற்றி அருந்தமிழை வீழ்த்தும்
   தடியாரைத் தாங்கிடுதல் தப்பு.
  1. அழிப்பார் சுழிப்பார் அடிப்பார் கெடுப்பார்
   பழிப்பார் தமிழின் பகை.
  1. எழுத்துத் திருத்தத்தை எந்நாளும் ஏலோம்
  முழுத்தமிழ் கொல்வாரை மொத்து
  1. கன்னடத்தில் சொல்லிவிட்டால் கால்முறிப்பார் நல்எழுத்தை
  என்னிடம் திருத்துகிறாய் இங்கு.?
  1. இதுவரை போதும் எழுத்துத் திருத்தம்
  புதுத்திருத்தம் செய்யாமை பேசு.
  1. மலையாளம் கோளாறு மண்டாரின் சிக்கல்
  இலைஎழுத்து மாற்றங்கள் அங்கு.
  1. தொல்காப் பியமோ துணிந்தநன் னுாலாரோ
   சில்லெழுத்தும் மாற்றாமை சீர்.
  1. கல்விமொழி யாக்கக் கடனாற்ற எண்ணார்கள்
   நல்லெழுத்தை மாற்று வதோ?
  1. பயிற்றுமொழி யாக்கு பசியைத் தணிக்கும்
   வயிற்றுமொழி ஆக்கிடவே வாழு.
  1. கற்ற தமிழ்மக்கள் கல்லாராய் மாற்றிவிடும்
   உற்றதீச்  சூழ்ச்சி ஒடுக்கு.
  1. உயிர்துடிக்கும் அன்னைக் குடன்தேவை சொல்எதுவோ?
   உயிர்மருந்தே பட்டன்(று) உணர்.
முனைவர் க.தமிழமல்லன்
thamizhamallan02


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்