thamizhk katamaikal 98: தமிழ்க்கடமைகள் 98. தமிழ்ப் புகழை யாராலும் விளக்க இயலாது
தமிழ்க்கடமைகள்
98. தமிழ்ப் புகழை யாராலும் விளக்க இயலாது
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 28/09/2011
மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே
தேனார்ந்த தீஞ்சுவைசால் திருமாலின் குன்றம்
தென்குமரி ஆயிடைநற் செங்கோல் கொள்செல்வி
கானார்ந்த தேனே கற்கண்டே நற்கனியே
கண்ணே கண்மணியே அக்கட்புலஞ்சேர் தேவி
ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே
அம்மே நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கெளிதே
- கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம் (பிள்ளை)
Comments
Post a Comment