Thamizhk katamaikal 95: தமிழ்க்கடமைகள் 95. கடவுள்தரும் தமிழே

தமிழ்க்கடமைகள் 

95. கடவுள்தரும் தமிழே

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/09/2011



கன்னலெ னத்தகும் இன்னமு தத்தமிழ்
கடவுள்த ருந்தமிழே
கற்றிட வுற்றிட நற்றவர் பெற்றருள்
கண்டது செந்தமிழே
தென்னக மன்னவர் அன்னவர் எல்லாம்
தேர்ந்தது பைந்தமிழே
தேடுதல் அற்றுயர் பாடல்வழு த்திடச்
செய்வது வண்டமிழே
முன்னிய எல்லா மின்னிய லேதரும்
மொய்ம்புள தும்தமிழே
மூவுல கும்தொழு நாவலருந் தொழ
மூத்தது முத்தமிழே
- புலவர் மா.க.காமாட்சிநாதன்: வள்ளலார் பிள்ளைத்தமிழ்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்