Ilakkuvanarin padaippu manikal 53- karpu (chastity): இலக்குவனாரின் படைப்பு மணிகள் 53.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 53. கற்பு இருசாரார்க்கும் இருக்கவேண்டிய பண்பாகும்

 

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 8, 2011


கற்பு என்பது பெண்களுக்குரிய தனிமைப்பண்பு என்று இன்று கருதப்படுகின்றது.  தான் மணந்து கொண்ட ஆடவன் ஒருவனையன்றி வேறு ஒருவனை உள்ளத்தாலும் விரும்பாத இயல்புதான் கற்பாகும் என்பர்.  எங்கோ பிறந்த ஆடவனும் எங்கோ பிறந்த பெண்ணும் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு உள்ளம் ஒன்றிக் கற்பித்துக்கொள்ளுதலினால் கற்பு எனப்பட்டது.  இவ்வாறு கற்பித்துக்கொண்டு ஒழுகுகின்றவர்கள் வேறொருவரைக் காதலிக்கத் தொடங்கினால் இக்கற்பு நிலைக்கு இழுக்கு என்று கருதினர்.  ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கொள்கைவழி வாழும் இக்கருத்தில் இக்கற்பு கணவன் மனைவி இருசாரார்க்கும் இருக்கவேண்டிய இயல்புப் பண்பாகும்.  பருவம் உற்ற ஆடவன் பருவம் உற்ற பெண்ணைக் கூடி வாழத் தலைப்படுங்கால் இக்கற்புநிலை மேற்கொள்ளப்பட வேண்டியதொன்று.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:173)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்