இலக்குவனாரின் படைப்பு மணிகள் 64. ஒப்புமை தானே என்று எதற்கும் எதனையும் கூறிவிடுதல் கூடாது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

64. ஒப்புமை தானே என்று எதற்கும் எதனையும் கூறிவிடுதல் கூடாது.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 29/09/2011



உவமை கூறுங்கால் இரண்டுக்கும் (உவமைக்கும் பொருளுக்கும்) உள்ள பொதுப் பண்பை எடுத்துக் கூறியும் உவமிக்கலாம் ; எடுத்துக் கூறாதும் உவமிக்கலாம்.  பவளம் போன்ற சிவந்த வாய் என்று கூறும்போது பவளத்திற்கும் வாய்க்கும் உள்ள பொதுப்பண்பாம் சிவப்பு நிறம் எடுத்துக் கூறப்படுகின்றது.  அவ்வாறு இன்றி பவளவாய் என்றும் கூறலாம்.  ஒப்புமை என்ன என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.  இது சுட்டிக்கூறா உவமம் எனப்படும்.  உவமை கூறுங்கால் உலகத்தார் உள்ளங்கொண்டு மகிழுமாறு கூறுதல்வேண்டும். ஒப்புமை தானே என்று எதற்கும் எதனையும் கூறிவிடுதல் கூடாது.  மயில் தோகை போலும் கூந்தல் என்பது தான் பொருந்துமேயன்றி காக்கைச் சிறகன்ன கரு மயிர் என்பது பொருந்தாது.  ஒற்றுமைக்குப் பாலும் நீரும்போல் என்பதுதான் பொருந்துமேயன்றி காஃபியும் டிக்காசனும் என்பது பொருந்தாது.  இருளன்ன கருங்கூந்தல் என்பது பொருந்துமேயன்றி தார் அன்ன கூந்தல் என்பது பொருந்தாது.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 243)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue