Ilakkuvanarin pataippumanikal 64: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 64. நச்சினார்க்கினியர் வட நூல்களைத் தழுவி உரைத்துள்ளார

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 64. நச்சினார்க்கினியர் வட நூல்களைத் தழுவி உரைத்துள்ளார்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 22, 2011



வெற்றி பிறருடன் உறழ்ந்தும் (போட்டியிட்டும்) பெறலாம் ; தாம் மேற்கொண்டுள்ள ஒன்றுள் தாமே வீறு பெற்று உயர்ந்தும் பெறலாம்.  நச்சினார்க்கினியர் பிறரோடு உறழ்ந்து பெறும் வெற்றியை வாகையென்றும் தாமாகத் தம் துறையில் மேம்படு வென்றியை முல்லையென்றும் அழைப்பர்.  ஆனால் ஆசிரியர் முல்லை யென்ற ஒன்றைச் சுட்டிக் கூறினாரிலர்.  நாவலர் பாரதியார் அவர்கள் “உறழ்பவரின்றி ஒரு துறையில் ஒப்புயரும் பரிசும் வாகையேயாகும்”"  என்றார். இவ்வகை எழு வகைப்படும்.
1.    அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
2.    ஐவகை மரபின் அரசர் பக்கமும்
3.    இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்
4.    மறுவில் செய்தி மூவகைக் காலமும்  நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்.
5.    நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்
6.    பாலறி மரபின் பொருநர் கண்ணும்
7.    அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையில்
தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்.
இந்நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர் வட நூல்களைத் தழுவி உரைத்துத் தமிழர்க்குப் பொருந்தா வாழ்வினைத் தம் புலமை நுட்பத்தால் பொருந்தச் செய்ய முயன்றுள்ளார்.  “தமிழ் மரபு கருதாது வடநூல் கூறும் வருண வேறுபாடுகளை அவரவர்க்கு அறுதியிட்டு வகுத்த தொழில் தொகுதியுடன் இங்குக் குறிப்பன போலக் கொண்டு பொருந்தாப் பொருள் கூறி இடர்ப்படுதலை”" எடுத்துக் காட்டி நாவலர் பாரதியார் அவர்கள் தமிழ் மரபுக்கேற்ற விளக்கவுரை  கூறியுள்ளார்கள்.  (தொல்காப்பியர் பொருட்படலம் – புறத்திணையியல் உரை – பக்கம் 100 – 106.)

(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 225-226)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்