Ilakkuvanarin pataippumanikal 68 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 68. மெய்ப்பாட்டியல் ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

68. மெய்ப்பாட்டியல் ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 28/09/2011



இலக்கிய மாந்தர்கள் உள்ள உணர்ச்சியால் உந்தப்படுகின்றகாலை எவ்வாறு சொல்லோவியப் படுத்துதல் வேண்டும் என்பதற்கு மெய்ப்பாட்டியல் மிகவும் துணைபுரியும்.  இவ்வகையான ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை என்றே கூறலாம்.  வடமொழியில் நடனம் பற்றிய மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன.  அவையும் தமிழ் நூல்களைப் பின்பற்றியனவேயாம்.  இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய ஆராய்ச்சிக்கும் உரியனவாகக் கூறப்பட்டுள்ள மெய்ப்பாடுகள் பற்றிய இவ்வியல் முழுதும் கிடைக்கப் பெற்றிலதோ என்று ஐயுற வேண்டியுள்ளது.  ஒவ்வொரு இயலிலும் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய விளக்கம் கூறிய பின்னர், வகை கூறத் தொடங்குவது ஆசிரியர் தனிச் சிறப்பு. இவ்வியலில் அவ்வாறு கூறப்பட்ட நூற்பா காணப்பெறவில்லை.  கரையானுக்கு இரையாகி விட்டது போலும்.

(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 240)
http://www.natpu.in/?p=16063

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue