Ilakkuvanarin padaippumanikal 60: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 60. தொல்காப்பியரைப் பெண்ணுலகம் நாளும் போற்றுதல் வேண்டுமன்றோ?

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 60. தொல்காப்பியரைப் பெண்ணுலகம் நாளும் போற்றுதல் வேண்டுமன்றோ?

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 18, 2011




இவ்வெழுவகைக் கூற்றால் அறத்தொடு நிற்கும் பொழுது தலைவியின் விருப்பத்தைக் குறிப்பாலறிந்து தோழி சொல்லற்பாலள்.  தலைவி எளிதில் மறையை வெளிப்படுத்த மாட்டாள்.  பெண்களுக்குரிய சிறப்புக் குணங்கள் அடக்கமும் மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளமும், நடுநிலைமையும், உரியகாலத்தில் உரியன கூறலும்.  அறிவுடைமையும், உள்ளக்கருத்தை எளிதில் அறிவியாமையும் ஆம், பெண்கயடிளைப் பற்றி ஆசிரியர் தொல்காப்யிர் இவ்வளவு உயர்வாகக் கூறியிருத்தலை பெண்கசே அறியார்.  நமது நாட்டில் பெண்களை இழிவு படுத்தும் உளப்பாங்கு இடைக் காலத்தில் தோன்றியது ’ எண்ணறக்கற்ற எழுத்தற ஓதினும் பெண் புத்தி என்பது பெரும் பேதைமைத்தே என்றனர்.  ‘பேதைமை என்பதும் மாதர்க்கு அணிகலம்’ என்றனர். ‘ஆழாழியன்ன அளவுபடா வஞ்ச நெஞ்சப் பாழான மாதர்’   என்றனர்.
‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்பனவே அவர்க்கியல்பாக உள்ளன என்றனர்.  ஆனால் ஆசிரியர் தொல்காப்பியர் கூறுவதென்ன ?

‘ செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லான’

இவ்வளவு உயர்த்திக் கூறும் ஆசிரியரைப் பெண்ணுலகம் நாளும் போற்றுதல் வேண்டுமன்றோ? தம் குழந்தைகளுள் ஒன்றினுக்கு அவர் பெயரை இட்டு வழங்கித் தம் நன்றியறிதலை வெளிக்காட்டல் வேண்டாமா?
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 20)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்