Book review: viyakka vaikkum kadhal by Maaththalai Somu: வியக்கவைக்கும் தமிழர் காதல்

வியக்கவைக்கும் தமிழர் காதல்

First Published : 05 Sep 2011 12:33:46 AM IST

Last Updated : 05 Sep 2011 12:37:59 AM IST

வியக்கவைக்கும் தமிழர் காதல் - மாத்தளை சோமு; பக்.320; ரூ220; தமிழ்க்குரல் பதிப்பகம், 5/15, 5-வது முதன்மைச் சாலை, ஞானம் காலனி, இராமலிங்க நகர், திருச்சி-3.அகத்திணைப் பாடல்களில் உள்ள காதல் சிறப்புகளை விளக்கி, வியக்க வைத்திருக்கிறது இந்நூல். ""அன்பு, காதல், காமம் முதலிய சொற்களுக்கு விரிவான விளக்கம் தருகிறார். காமம் என்ற சொல்லுக்கு, இதுவரை, "கமம் நிறைந்தியலும்' எனும் தொல்காப்பிய நூற்பாப்படி (838) விளக்கம் தந்துள்ளார். அது இன்பம் துய்த்தடையும் மன நிறைவு' என இவர் விளக்குவது ஒரு சிறப்பாகும். மேலும், காமம் என்றால் வேளாண்மை-விவசாயம் என்று இலங்கையில் வழங்குவதை எடுத்துக் காட்டுகிறார். "கமக்காரன்' என்பார்களாம். காமம் என்பது அதனுடன் தொடர்புடை வந்த தமிழ்ச்சொல் எனக் கூறுகிறார். திருவள்ளுவரை "காதற்கவிஞர்' என்று பாராட்டும் இவர், நாயன்மார்களும் பட்டினத்தாரும் அருணகிரியாரும் பெண்ணின்பத்தை வெறுத்துப்பாடிய இடங்களைச் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் வரம்பு மீறிய பெருந்திணைக் காதலால், மாந்தர்கள் தம்மையே இழந்து, அதிலேயே மூழ்கி விடுவதையே அவ்வாறு பாடினர் எனலாம். பிற பல இடங்களில் இறைவன் மீது கொள்ளும் பத்திமையை அவர்கள் காதல் என்று பாடியுள்ளதையும் கருத வேண்டும். தலைப்புதோறும் அழகிய, இனிய பாடல்களை எடுத்து விளக்குவதால், வாசகர்களுக்கு இது ஒரு நல்விருந்தாகும்'' என்று நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள மூத்த தமிழறிஞரான தமிழண்ணலின் மோதிர விரலால் குட்டுப் பட்டிருக்கும் நூலாசிரியரின் 52 இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய இந்நூலைப் பற்றி விரிவாக வேறு எதைக் கூறிவிடமுடியும்? படித்து அனுபவிப்பதே இன்பம்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்