books: perumpaanaatru padai & madurai kaanchi by ko'kkalai rajan: பெரும்பாணாற்றுப்படை&மதுரைக் காஞ்சி

பெரும்பாணாற்றுப்படை

First Published : 05 Sep 2011 12:35:05 AM IST


பெரும்பாணாற்றுப்படை (ஆராய்ச்சியுரை); பக்.336; ரூ.100; மதுரைக் காஞ்சி (ஆராய்ச்சியுரை); பக்.368; ரூ.100; (இருநூல்கள்); கோக்கலை ஜே.ராஜன்; வெளியீடு: "மகராணி', சென்னை-101; )044-26543963/9445019814.பத்துப்பாட்டு நூல்களுள் பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி ஆகிய இருநூல்களும் குறிப்பிடத்தக்கவை. பெரும்பாணாற்றுப்படை 500 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது. தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்று வந்த ஒருவன், பரிசில் பெறுதற்குரிய பெரும்பாணன் ஒருவனை ஆற்றுப்படுத்தியதற்காக அந்த இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பாடல்கள்தான் பெரும்பாணாற்றுப்படை. மாங்குடி மருதனார் என்பவரால் இயற்றப்பட்டது மதுரைக்காஞ்சி. இந்நூல் 782 அடிகள் கொண்ட, முதலிலும் இடையே சிலவிடத்தும் வஞ்சியடிகள் வந்த ஆசிரியப்பாவால் ஆனது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனுக்கு வீடுபேறு நிமித்தமாக உலகியலில் உள்ள பல்வேறு நிலையாமை மாங்குடி மருதனாரால் அறிவுறுத்தப்பட்டவைதான் மதுரைக்காஞ்சி. இவ்விரு நூல்களுக்கும் பொழிப்புரை, ஆராய்ச்சியுரை மற்றும் அருஞ்சொல் உரை ஆகியவை நூலாசிரியர் எழுதியுள்ளார். இவ்விரு நூல்களுக்கும் இதுபோன்றதொரு மிக விரிவான, விளக்கமான, எளிமையான உரைநூல்கள் இல்லை என்றே கூறலாம். நூலாசிரியரின் பல்லாண்டுகால உழைப்பு நூலில் பளிச்சிடுகிறது. பள்ளி-கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டிய அருமையான ஆராய்ச்சி நூல்கள்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்