Ilakkuvanarin pataippu manikal 61: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 61. நல்லரசின் போர்க்கொள்கை

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 61. நல்லரசின் போர்க்கொள்கை

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 19, 2011



இவ்விருபதாம் நூற்றாண்டில் நாகரிகமுற்ற நல்லரசுக் கொள்கையாக விளங்கும் ஒன்று ஆசிரியரால் கூறப்பட்டிருப்பது, தமிழினத்திற்குப் பெருமை தருவதன்றோ – போர் – போர்க்காக அன்று ; நாட்டை விரிவுபடுத்த அன்று ; பிறரை அடிமை கொள்ள அன்று – விரிவுபடுத்தவும் அடிமைப்படுத்தவும் போர் தொடுக்கும் எண்ணம் கொண்டுள்ள அரசு மீது போர் தொடுப்பது எனின் அப்போர் அமைதிப்போர், அறப்போர் என அழைக்கப்படும் தகுதியுடைய அன்றோ?

“எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே.”

எஞ்சா = குறையாத, மண்நசை = மண்ணாசையுடைய வேந்தனை = அரசனை, வேந்தன் = நல்லறம் கருதும் அரசன், அஞ்சுதக = மண்ணாசை மன்னன் அஞ்சுமாறு, தலைச்சென்று = முன் படையெடுத்துச் சென்று, அடல் குறித்தன்றே = வெல்லுதல் குறித்ததாகும் வஞ்சி.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 217-218)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்