இலக்குவனாரின் படைப்பு மணிகள் 65. புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 65. புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/09/2011


புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள்; மக்களை நல்வழிப்படுத்தும் விதிகள் பல அமைக்கும் சட்ட மன்றம் போன்றவர்கள்.  அரசரேயாயினும் யாவரே யாயினும் நெறிதவறிச் சென்றால் அதனை எடுத்துக்காட்டி நேர்வழி நடக்க அறிவுரை கூறுவார்கள்.  இக்காலத்து மக்களாட்சி அரசு மக்களுக்குச் கேடு பயக்கும் நெறி முறைகளை மேற்கொள்ளத் தொடங்கினால் எதிர்க் கட்சிகள் எதிர்த்து நின்று அரசின் குற்றங்களை எடுத்து இயம்புகின்றன.  அக்காலத்தில் கட்சி முறையில் ஆட்சி இல்லை.  ஆகவே புலவர்களே அப்பணியையும் ஆற்றிவந்தனர்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 234)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்