வணக்கம் ...!!! என் மனப்பதிவும் ஒலிப்பதிவும் இது.பாருங்கள்.கேளுங்கள். நன்றி தமிழ்ப்பொடியன். நம்பிக்கை தமிழன் தலை நிமிர்ந்து நின்றான். இமயம் முதல் குமரி வரை கொடிகட்டிப்பறந்தான். பார்த்தவனுக்கும் கப்பல் ஏறி வந்தவனுக்கும் வயிறு பற்றி எரிந்தது. கட்டபொம்மன் கைகட்டி நிற்காது தலைநிமிர்ந்து நின்றான். கயவர்கள் சிலர் துரோகிகள் ஆயினர். கூட இருந்து குழி பறித்தனர். அன்று தொடங்கிய துன்பம் இன்றும் தமிழனுக்கு தொடர்கதையானது. கரிகாலன் காலத்தில் மீண்டும் தலை நிமிர்ந்தான் தமிழன். சிங்களவனுக்கும் பொறுக்கவில்லை.வந்தவனுக்கும் பொறுக்கவில்லை. விடுதலை வேட்கையின் வெம்மையை தாங்கமுடியாமால் வீணர்கள் சிலர் "பயங்கரவாதம்" என பச்சைகுத்தினர். வல்லாதிக்க சண்டியர்கள் வஞ்சகம் செய்து வீழ்த்தி விட்டனர். மண்ணைமட்டும் வெற்றி கொள்ளலாம். மனங்களையும் மன உறுதியையும் மழுங்கடிக்க எவனாலும் இயலாது. இது தமிழனின் தனிக்குணம். மண்ணுக்குள் விதையான மறவர்களின் கனவுகளை மறவோம். காற்றோடு கலந்திருக்கும் கருமணிகளை மறவோம். உறவுகள் உயிர்கொடுத்து வழர்த்த உன்னத இலட்சியம் மறவோம். முட்கம்பி வேலிக்குப் பின் உறங்கும் உறவுகளையும் மறவோம். மொத்தத்த...
Posts
Showing posts from August, 2009
- Get link
- X
- Other Apps
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முனைவர் மலையமான் First Published : 30 Aug 2009 02:47:00 AM IST Last Updated : திரி சூலத்தின் மூன்று கூர் முனைகளைப் போல், 19-ஆம் நூற்றாண்டில், மூன்று மாபெரும் துறவிகள் தமிழ் மண்ணில் திகழ்ந்தார்கள். அவர்கள் ராமலிங்க வள்ளலார் (1823-1874), தண்டபாணி சுவாமிகள் (1839-1898), பாம்பன் சுவாமிகள் (1850-1929). ராமலிங்க வள்ளலாரைப் பற்றித் தமிழகம் பரவலாக உணர்ந்திருந்தது. மற்ற இருவரும் அந்த அளவுக்குப் போற்றப்படவில்லை. தண்டபாணி சுவாமிகளும் வள்ளலாரைப் போன்ற தெள்ளுதமிழ்ப் புலவர். பலவிதச் சிறப்புகளுக்கு உரியவர்.திருநெல்வேலியில் செந்தில்நாயகம் பிள்ளை-பேச்சிமுத்து தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த மாதமும் தேதியும் அறியமுடியவில்லை. இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். தந்தையின் நண்பரான சீதாராம நாயுடு என்பவரால் இவருக்கு முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமைப் பெற்றார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் விழுமிய ஆற்றல் கைவரப் பெற்றார்.அந்த வயதில், "பூமி காத்தாள்' என்ற அம்மனுக்கு அப்பெ...
- Get link
- X
- Other Apps
கொடிநிலை, கந்தழி, வள்ளி...! வித்துவான் ஆதி.பாலசுந்தரன் First Published : 30 Aug 2009 02:49:00 AM IST Last Updated : தொல்காப்பியத்தில் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் மூன்று வாழ்த்து நிலைகள் சொல்லப்படுகின்றன. இம்மூன்றுக்கும் நச்சினார்க்கினியர் தத்துவார்த்தப் பொருள் கண்டுள்ளார்.இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழ்மக்கள் இயற்கை வழிபாடு செய்தார்கள் என்பதற்கு அடிப்படையாகத் துலங்கும் இம்மூன்றும், கொடிநிலை, கால மாற்றத்தால் பரிணாம வளர்ச்சி பெற்று, திருக்கோயில் கொடிமரமாக, ஏற்றப்படும் கொடியாக; "பலிக்கல்'லாக, வள்ளி, பலிக்கல்லில் படைக்கப்படும் பலியாக மாற்றம் பெற்றன என்னும் முறையில் இப்போது சிந்திக்கலாம்.இயற்கை வழிபாடாகிய மரவழிபாட்டுடன் இம்மூன்றையும் தொடர்புபடுத்தியும் பார்க்கலாம்.முதலில் கொடிநிலை - கானகத்தில் இருள்பட வளர்ந்த மரங்களின் மீது இயற்கையாகவே தழைத்துச் செழித்த கானகத்துக் கொடிகள் சுற்றிப் படர்ந்து நெடிதுயர்ந்து சென்றிருப்பது இயல்பு.இதைக் கண்ணுற்ற அக்கால மக்கள் மன உணர்வில், அப்போது அவர்களுக்குக் கிடைத்த பட்டறிவிலும், நூலறிவிலும் கொடிசுற்றிப் படர்ந்...
- Get link
- X
- Other Apps
தேசிய நூலாகட்டும் திருக்குறள்! கிருங்கை சேதுபதி First Published : 30 Aug 2009 02:51:00 AM IST Last Updated : திருக்குறள் தோன்றியது தமிழில் என்றாலும், அது, தமிழ்நாட்டையோ, தமிழ்மொழியையோ, தமிழ் இனத்தையோ, தமிழ் மன்னர்களையோ எந்த இடத்திலும் சுட்டிக்காட்டாத பொதுமை கொண்டது. திருக்குறள் சுட்டும் நாட்டின் இலக்கணம் எந்த நாட்டுக்கும் பொருந்தும். இந்தியப் பண்புகளுள் சிறந்ததான, மதச்சார்பின்மைக்கு நல்லிலக்கியமாக மலர்ந்துள்ள இத்திருக்குறள் கடவுளை மறுக்கவில்லை. அதே சமயம், எந்தச் சமயத்தையும் முன்னிறுத்தவில்லை. இல்லறத்தாருக்கும் நல்லறம் புகலும் இவ்விலக்கியம், துறவறத்தாரையும் இணைத்துச் சிந்திக்கிறது. தன்னளவில் உள்ள பண்புகளை விட்டுக்கொடுக்காமலும், உலக அளவில் நேயம் பேணுவதையும் முன்னிறுத்தி, எல்லாச் சாதியினருக்கும், எல்லாச் சமயத்தாருக்கும், எல்லா இனத்தவருக்கும், எல்லா மொழியினருக்கும் ஏற்ற நீதியை, இந்தியப் பொது அறத்தை நடுநிலைமையோடு மொழிகிற உன்னத இலக்கியம் திருக்குறள்.கார்லைல் என்ற பேராசிரியர், ""மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும்''...
- Get link
- X
- Other Apps
நல்வழி First Published : 30 Aug 2009 02:54:00 AM IST Last Updated : வேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமேபாதாள மூலி படருமே - மூதேவிசென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமேமன்றோரம் சொன்னார் மனை. (பா-23)நீதி மன்றத்தில் பொய் சாட்சியம் சொன்னவரின் வீட்டில் பேய்கள் குடியேறும். சூடத்தகாத வெண்மையான எருக்கம் பூக்கள் பூக்கும். படரக் கூடாத பாதாள மூலி படரும். மூதேவி சென்று நிலையாகத் தங்குவாள். பாம்புகள் குடிபுகும். பொய்சாட்சி சொன்னவர்கள், இவ்வாறு தன் சுற்றத்துடன் அழிவர்.
- Get link
- X
- Other Apps
இந்த வாரம் கலாரசிகன் First Published : 30 Aug 2009 02:55:00 AM IST Last Updated : எழுத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் அங்கீகாரம், ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதுவதால் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. வியாபார சஞ்சிகைகளில் எழுதாமல் இருந்திருந்தாலும் புதுமைப் பித்தனும், தி.ஜானதிராமனும், ஜெயகாந்தனும் பிரபலமாகி இருப்பார்கள் என்பதில் சந்தேகம் என்ன?மேலே சொன்ன வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இன்னொரு பெயர் கு.சின்னப்ப பாரதி. வேடிக்கை என்னவென்றால், உலக அரங்கில் அறியப்படும் இந்தத் தமிழ் எழுத்தாளர் இன்றுவரை வியாபார சஞ்சிகைகளின் நிழலில் கூட ஒதுங்கியது இல்லை என்பதுதான். வாசகர்களைத் திருப்திபடுத்தவும், பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கவும் எழுதுவதைத் தவிர்த்து, எழுத்தை ஒரு தவமாகவும், சமுதாயக் கடமையாகவும் கொண்ட எழுத்தாளர்களின் பட்டியலில் முன்நிலை வகிப்பது யார் என்று கேட்டால், விவரமறிந்தவர்கள் கு.சி.பா. என்றுதான் கூறுவார்கள்.கு.சின்னப்ப பாரதியா? யார் அந்த எழுத்தாளர் என்று கேட்பவர்கள் அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவார்கள். இவரது "தாகம்...
chennai andru
- Get link
- X
- Other Apps
செ ன் னை ப ழை ய செ ன் னை '''' மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் First Published : 28 Aug 2009 05:47:34 AM IST Last Updated : 28 Aug 2009 06:24:29 AM IST நவீனன் 1940 ஆம் ஆண்டில் இன்றைய சென்னை மெட்றாசாக இருந்தது. அந்தக் கால மதராஸின் பகுதிகள் ஜார்ஜ் டவுன், பார்க் டவுன் என்றெல்லாம் அழைக்கப்பட்டன. மவுண்ட் ரோட்டில் இப்போது போல மக்கள் நடமாட்டம், நெருக்கடிகள், போக்குவரத்து நெரிசல்கள் அப்போது இல்லை. குறுக்கும் நெடுக்குமாக யார் வேண்டுமானாலும் போகலாம். பஸ்கள் கூட எப்போதாவதுதான் வரும். 1940களில் பெட்ரோல் பஞ்சம் சில காலம் இருந்து வந்தது. பஸ்கள் பின்னால் ஒரு பெட்டியை நிறுவி அதற்குள் கரி நிரப்பி தீ மூட்டி புகை கக்கும்படி செய்து வந்தார்கள். அந்த சூட்டில் பஸ்கள் செல்லும். பஸ் கண்டக்டர் கரிப் பெட்டியை சுழற்றுவார். "சுந்தரம் மோட்டார்ஸ்' நிறுவனம் மட்டுமே பஸ்களை இயக்கி வந்தது. அரசு பஸ்கள் அப்போது இல்லை. இதுதவிர ட்ராம் போக்குவரத்து இருந்தது. மிக மெதுவாக செல்லும் இந்த வண்டிகளில் நடந்து கொண்டே ஏறி போகும்போதே இறங்கி பயணிப்பது மதராஸ்வாசிகளுக்கு ஒரு தனி சு...
- Get link
- X
- Other Apps
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்......... 11/05/2009 பசிக் கொடுமையிலே பரிதவிக்கிறார் பால் முகம் மாறாத ஈழத்துப் பாலகர்கள். கால் வயிறு கஞ்சிக்கு கடப்பாரையோடுகடும் வெயிலிலே உணவு தேடுகின்றார். ஊட்டமில்லாத உணவை நாள்தோறும் உண்பதினால் வாட்டமான முகத்துடன் சோட்டமாக வாழுகின்றார் நம் பாலகர்;. ஒட்டிய வயிறோடும் வற்றிய கண்ணோடும் வாழ்பவர் ஒரு பக்கம் அறு சுவை மறந்து ஒரு சுவையாவது கிடைக்குமா என ஏங்குபவர் ஒரு பக்கம் பால் கேட்கும் பாலகனுக்கு இதயத்தை இரும்பாக்கி இருண்ட உலகத்தில் உணவைத் தேடி அலைபவர் ஒரு பக்கம் பஞ்சம் தலை விரித்தாட பட்டினியும் கை கோர்க்க அடம்பன் கொடியும் உணவாகும் நிலை தனி ஒருவனுக்க உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்என்றான் பாரதி. கொடுமையில் பெரிய கொடுமைபசிக் கொடுமை பட்டினியால் பாலகர்கள் நம் தாய் நாட்டில் பரி தவிக்க பால் பழம் அருகிலிருந்தும் பாபா படம் போட்டால் தான்சாப்பிடுவேன் என்கிறதுபுலம் பெயர்ந்த குழந்தை. சற்று சிந்திப்போம்சாவை விரட்டுவோம் பட்டினிக்கொடுமையில்பரிதவிக்கும் எம் உறவுகளைபலம் கொண்டு காத்திடுவோம்; நன்றி வணக்கத்துடன் ரத்...
- Get link
- X
- Other Apps
இன்னும் நட்சத்திரம் இருளவில்லை 04/07/2009 கடலோரம் பெருவனங்கள் கரைநெடுக நெடுமரங்கள் படல்வீடே ஈழமுகம் பண்பாடே ஈழநிலம் படகெல்லாம் மீன்கள்வளம் படுகரையில் உப்பின் அளம் குடிதோறும் தென்னைவளம் குறும்பலா தரைதவழும் கரையோரம் நெய்தல்நிலம் கரைதாண்டி முல்லைவளம் மருத நிலம் நடுநாடு மண்மனக்கும் வயற்காடு பழந்தமிழர் கொல்லையயலாம் பனைமரங்கள் எல்லைகளாம் பழம்பதியின் முதற்குறியே பனைமரத்தின் முகவரியே நான்குநிலம் கொண்டதனால் நானிலமே எமதீழம் நன்னிலத்தில் நெல்வாழை கன்னலுக்குக் கரும்பாலை நான்குநிலம் கொடுங்கோலாய் அஞ்சு (ம்)நிலம் ஆனகதை ஈழயினம் சிங்களத்தால் ஏழையினம் ஆனகதை அஞ்சும்நிலம் தடைமீறி மிஞ்சிநின்ற வேரின்கதை சிங்கத்தை வேங்கையினம் சீறிநின்ற போரின்கதை ஞாலமெல்லாம் எம்மினத்தை நடுக்களத்தில் விற்றகதை ஓலமிட்டு லட்சம்பேர் உலைக்களத்தில் வெந்தகதை கண்ணுள்ளார் காணவில்லை காதுள்ளார் கேட்கவில்லை குழந்தைகளை மீட்கவில்லை குமரிகளைக் காக்கவில்லை வதை தடுப்பதற்காய் வேண்டினோம் டெல்லிக்கொடி வதையை நிறுத்திவிட வணங்குகிறோம் தொப்புள்கொடி எக்கொடியும் வரவில்லை இக்கொடியர் போர்நிறுத்த வக்கரித்த தேர்தலிலே வாக்களித்த தமிழ...
- Get link
- X
- Other Apps
இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். 11/05/2009 முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்ப்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன் எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே........ "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்! உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்! மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்! அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும் ஆட்லறியாலும் அடித்து நூற்றுயிர்கள் உடல் சிதறிப் போனதும் ஆயிரக்கணக்கில் குற்றுயிராய் கிடப்பதுவும் அறிந்திருப்பீர்கள். இன்னும் தொண்டு நிறுவனங்களுக்கு தடை, சுதந்திர ஊடகம் இல்லை, கொலைக்களத்தில் குரல் கொடுக்க யாருமற்ற ஏதிலிகளாய் நாம் உங்கள் முன்னே மண்டியிட்டு நிற்கிறோம். யார் வந்தார் எமை ...
- Get link
- X
- Other Apps
புலம்பெயர் மண்ணின் முதலாம் தற்கொடையே! 08/05/2009 ஐ.நா.முன்றலிலே உண்மைய்க்காய் உயிர்தந்தமுதலாம் தற்கொடைமுருகதாஸ். புலம் பெயர் மண்ணில் ஜெனிவாப் பெருநகரில் ஐ.நா.முன்றலிலே உண்மைய்க்காய் உயிர் தந்தமுதலாம் தற்கொடையே முருகதாசே! உன் முகமறியேன் -ஆனால்உன் உணர்வைப்புரிந்து கொண்டேன்....சாவதென்று முடிவெடுத்த எத்தனைபேர் - மறுகணமே எதையெதையோ எண்ணிதம் முடிவை மாற்றிடுவார். ஆனால் நீ! தன்னந் தனியனாய் இலண்டனில் இருந்து வந்திறங்கியிருக்கிறாய்... நீதிகெட்ட உலகுபுரிந்து கொள்ளும்படி தமிழன் வரலாற்றைத் தொட்டு தடம் மாறாமல் நியாயங்களை நிரைப்படுத்தி உறைப்பாய் உரைத்து எழுதியிருக்கிறாய்.... நீ பிறப்பெடுத்த தேதமிழிற்காய் என்பதாய் உனதுயிரை ஐ.நா.வின் முன்றலிலே தீயில் எரித்து வைத்தாய்.... நீ எரிந்து போகவில்லை தமிழர் உள்ள தேசமெங்கும் விரிந்து போனாய்.... உலகின் மனச் சாட்சியில் விழுந்து விட்ட பேரிடியானாய்..... நீ நாதியற்றுப்போய் கையறு நிலையில் மரணித்தாய் என்று எதிரியும் சொல்லமாட்டான் உனது மரணத்தால் தமிழர் படும் வேதனையை உலகிற்குச் சொல்வதற்கு பெரிதாய் ஒரு கைகொடுத்தாய்.... உண்டகையின் ஈரம் ...
- Get link
- X
- Other Apps
ஈழத்துப் பாப்பா பாடல் 10/05/2009 வன்னியில் நடைபெறும் மனிதாபிமான நெருக்கடிகளை எடுத்து விளக்கும் ஈழத்துப் பாப்பா பாடல் ஓடி மறைந்துகொள் பாப்பா -நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா -நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம் தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று பேய்களின் ஆட்சியடி பாப்பா யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின் சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம் மொத்தத்தில் பாவிகளடி பாப்பா காக்கை குருவி எங்கள் ஜாதி - இவற்றோடு காட்டில் வாழ்கிறோம் ப...
- Get link
- X
- Other Apps
அன்புத் தமிழகமே! வணக்கம் 10/05/2009 அன்புத் தமிழகமே! வணக்கம்,இந்தக் கவிதையினை அனைவரும் படியுங்கள். இதிலுள்ள இந்தியக் காங்கிரசார் பற்றியும் தமிழ் மக்களின் எதிர்கால நிலைப்பாடுகள் பற்றியும் நீங்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம்.. ஆப்பிழுத்த குரங்கர்கள் - எங்கள் தமிழ்த்தேசம் தோர்க்குமென்று நினைப்பாரோ.!? அதனாலும் உறுதியொன்று நாம்கொள்ள இதுவாச்சு தக்க நேரம். பொன்னான பூமியிலேதமிழ்க் கண்ணான ஈழதேசம் - இன்று ஒப்பாரி ஓலமிட - ஆங்கே கொத்தணிக் குண்டெறிந்து கொல்கிறானே கோத்தபாயாக் குண்டர்கள். முண்டங்களாய் பிண்டங்களாய் - எம் தமிழன் அறுபட்ட மிருகம்போலஅங்கங்கள் சிதறிப்போய்க் கிடக்கிறானே அவரொடு ஏதறியாப் பாலகரும் சாகிறதே கொத்துக் கொத்தாய்..!? தட்டி அதைக் கேட்பதற்கோ நிறுத்த அதைச்சொல்வதற்கோ நாதிகள் தாம் ஏதுமற்ற நிலையாச்சே இவ்வுலகில். அன்றென்றால்... பாரதமே படுகுழியுள் போகுமென்று பாக்கிஸ்த்தானாய்..! பங்களாதேசாய்..!! இந்தியாவாய்..!!! பிய்த்தெடுத்த எங்கள் பாரதமக்களினை... மதமென்றும் இனமென்றும் பிய்த்துப் பிரித்தெடுத்து - எங்கள் அமைதிவாழ்வைக் குலைத்தவர்கள்...குலைந்துபோச்...
- Get link
- X
- Other Apps
சிங்கள ‘மனிதநேயமும்’ அவுஸ்திரேலிய இன வெறியும்! 04/07/2009 அவுஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதைவாங்கியிருக்கிறார்களாம் ‘இந்தியர்கள்’. கடந்த வாரம் கூட ஒரு ‘இந்தியர்’ கும்மாங்குத்து வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம். அவுஸ்திரேலிய அரசு ‘இனவெறி'யுடன் நடந்து கொள்கிறதாம். அடப் பாவிகளா... ரெண்டு பேருக்கு உதடு கிழிந்ததற்கே ‘இனவெறி' என்று கூச்சல் போட்டால், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மழலைகள்... பெண்கள்... முதியவர்கள்... என்று எந்த இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும் புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே... அதனை என்னவென்று சொல்வீர்கள்? அவுஸ்திரேலிய சாராயக்கடையில் குடித்துவிட்டு அலப்பரை செய்தபோது விழுந்திருக்கிறது முதல் உதை. அதற்கே குய்யோ... முய்யோ... என்று கூப்பாடுகள்... பிரதமரின் எச்சரிக்கை... உள்துறை, வெளியுறவுத் துறையின் அலறல்கள்... தூதுவர்களின் கண்டனம்... வட இந்தியத் தொலைக்காட்சிகளின் ஓலங்கள்... இவற்றையயல்லாம் பார்த்தும் கொஞ்சம்கூட இரக்கம் வரவில்லை. மனம் இறுகிப் போயிருந்தது. இதற்காக வேதனைப்படவுமில்லை. கண்ணீர் ...
- Get link
- X
- Other Apps
நாம் தமிழர் என்றுரைப்போம் 16/08/2009 தலைநிமிர்ந்து நின்ற எங்கள் தமிழ்மக்கள் தமை அழித்த கொலைகாரன் இராசபக்சே குலம் ஒருநாள் அழிந் தொழியும் ஒருநாளில் கொன்றொழித்தான் உயர்ஈழத் தமிழர்களில் இருபதாயிரம்பேரை இனப்பகைவன் இராசபக்சே இருமூன்று மாதத்தில் ஒருலட்சம் தமிழர்களைக் குறிவைத்துக் கொன்றழித்தான் கொடும்பாவி இராசபக்சே கொத்தணியாம் குண்டுகளால் கொடியவனாம் இராசபக்சே எத்தனையோ தமிழர்களை இல்லாமல் அழித்தானே. வாழத் துடிக்கின்ற ஈழத் தமிழினத்தை கோழை இராசபக்சே கொன்றழித்து விட்டானே இட்லருக்கு அண்ணனாகி எங்கள்தமிழ் உறவுகளைக் கொட்டடியில் அடைத்துவைத்துக் கொடுமைபல செய்கிறானே மனிதநேயமில்லாத மாபாவி இராசபக்சே தனிமையிலே நின்றழுது சாவான் உறுதியிது அவன்சாகும் ஒருநாளில் ஐயோவென் றழுவதற்கு எவன்வருவான் நாய்,நரியால் இழுபட்டுக் கிடப்பானே உரிமைகேட்டு நின்றதமிழ் உறவுகளைக் கொன்றழித்த சிறுமைசேர் இராசபக்சே சீரழிந்து சாவானே. சீர்த்தமிழ்ப் பெண் குலத்தைச் சீரழித்த இராசபக்சே சீரழிந்து தலைவெடித்துத் தெருவில்தான் கிடப்பானே நெஞ்சம் எரியுதடா நினைக்கையிலே பதறுதடா க...
- Get link
- X
- Other Apps
பிடித்தது: என்னைக் கவர்ந்த பத்து நூல்கள் திருப்பூர் கிருஷ்ணன் First Published : 23 Aug 2009 12:58:00 PM IST Last Updated : உங்களைக் கவர்ந்த பத்துப் புத்தகங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால், நா.பா.வின் குறிஞ்சிமலர், தி.ஜா.வின் மோகமுள், சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை போன்ற சில நாவல்களே பலரது பட்டியல்களில் இடம்பிடிக்கும். இவையெல்லாம் சிறந்த படைப்புகளே. ஆனால் நாவல்கள் மட்டும்தான் படிக்க வேண்டியவையா? சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வடிவங்களிலும் இசை, மதம், தொல்லியல் போன்ற பல்வேறுதுறைகளிலும் எத்தனையோ நல்ல நல்ல நூல்கள் உண்டே? அவற்றையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது எப்போது? அப்படியொரு முயற்சி இது. அண்மைக் காலத்தில் நான் முழுமையாக வாசித்த புத்தகங்களில் நாவல் தவிர்த்து என் கவனத்தைக் கவர்ந்த பத்தே பத்து நூல்களின் மிகச் சுருக்கமான அறிமுகம் இதோ: 1. எழுத்து உலகின் நட்சத்திரம் தீபம் நா.பார்த்தசாரதி நா.பா.பற்றிய கட்டுரைத் தொகுப்பு. அவரே எழுதிய இரு கட்டுரைகளும் நூலில் உண்டு. நா.பா. அமுதசுரபிக்காகச் சுயசரிதை எழுதிய போது எழுதியவாறே மருத்துவமனையில் ...
- Get link
- X
- Other Apps
ஆறுதல் பரிசுக் கதை: அப்பாவின் அஞ்சலி க. அம்ச கோபால் முருகன் First Published : 23 Aug 2009 01:22:00 PM IST Last Updated : இடைவிடாமல் புலம்பிக்கொண்டிருந்தார் அப்பா. ""ஏண்டா மாரிமுத்து இப்படி நடக்குது?'' எதைப் பற்றிய பேச்சாக இருந்தாலும் இறுதியில் அப்பாவின் புலம்பல் இப்படியாகவே இருக்கிறது. சுப்பண்ணன்கூட இதுபற்றித்தான் நேற்று இவனிடம் விசாரித்தார். தோட்டத்தில் வேலை செய்கிற போதும் இப்படித்தான் புலம்புகிறாராம். ""உன்னோட படிப்பு, கல்யாணம், வேலை... இது பற்றிக்கூட எதுவும் இத்தனை நாள் பேசினதேயில்லைடா... இவரா இப்படின்னு ஆச்சரியமா இருக்கு... வயசுக்கு வந்த பொண்ணு வீட்ல காத்திட்டிருக்கா அதப் பத்தியும் கவலையில்லே...'' அம்மாவும் இதைத்தான் கூறுகிறாள். அப்பாவுக்கும் அரசியலுக்கும்கூட அப்படியொன்றும் நெருங்கிய பந்தம் ஒன்றுமில்லை. இவரோடு இருப்பவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினர்கள்தான். சாதிச் சங்கங்கள்கூட அலர்ஜிதான். அது பற்றியும் அம்மா அலுத்துக் கொள்வாள். ""எல்லா மனுசங்களும்தான், திண்ணை, பாலம்னு உக்காந்து நாலு வா...
- Get link
- X
- Other Apps
முகங்கள்: 65 பெண்கள் எழுதும் ஒரு புத்தகம்! ந.ஜீவா First Published : 23 Aug 2009 01:18:00 PM IST Last Updated : சவுதி அரேபியாவில் ரியாத் நகரம். அங்கேயுள்ள எட்டு மாடிக் கட்டிடத்தில் ஒன்று, அல்மார்ஜி பில்டிங். அது 1998 ஆம் ஆண்டு. எங்கும் போர் மேகங்கள் சூழ்ந்த காலம். ஸ்கட் ஏவுகணைகள் குறிபார்த்து ஏவப்பட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கட்டிடத்தில் நான்காவது மாடியில் எந்த நேரத்தில் ஸ்கட் தாக்குதல் நடக்குமோ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தது ஒரு தமிழ்க் குடும்பம். அந்த அனுபவம் பின்னர் ஒரு புத்தகமாக வெளிவந்தது "வளைகுடாப் போரில் நான்' என்ற பெயரில். அதை எழுதியவர்: விஜயலட்சுமி மாசிலாமணி. வாழ்வின் அனுபவங்களை உயிரோட்டமான நடையில் எழுதும் விஜயலட்சுமி மாசிலாமணி இதுவரை வெளியிட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை 12. மிக வித்தியாசமான முறையில் பெண்கள் அமைப்பு ஒன்றையும் சென்னை மடிப்பாக்கம் சதாசிவ நகரில் "சூரியத் தென்றல்' என்ற பெயரில் அவர் நடத்தி வருகிறார். "சூரியத் தென்றலின்' நோக்கம், செயல்பாடுகளைப் பற்றி அவர் நம்மிடம் பேசினார். * சென்னையில்...