கூற்றே உண்மை கூறு!
அன்னைத் தமிழை அரியிருக்கை
அமர்த்த வுழைத்த அடலேற்றை
முன்னே நுழைத்த மூடமெலாம்
முறிக்க இசைத்த முறையூற்றைப்,
பொன்னை நிகர்பா புரிந்திசையார்
புரட்சிக் கவியைத் தமிழ்ப் பேற்றைச்,
சென்னை நகரில் சிறையெடுத்துச்
சென்ற தேனோ சிறு கூற்றே?
- காரை. இறையடியான்
- குறள்நெறி: வைகாசி 2, 1995 / மே 15. 1964
Comments
Post a Comment