கண்ணீர்ப் பெருக்கினைக் காண் akaramuthala bharathidasan spl. issue

கண்ணீர்ப் பெருக்கினைக் காண் – கவிஞர் முத்தன்


bharathidasan02கத்து கடல்சூழ் புதுவைக் கருங்குயிலே!
புத்தமுதப் பாடற் பொழிவாய் நீ – இத்தரையில்
மொத்த புகழ் ஒத்தவிசை எத்தனையோ அத்தனையும்
நத்திச் சுவைத்தாய் நன்று.
பாடும் இசைக்குயிலே. பாரதி தாசனே!
தேடு சுவைபடைத்த தேன்பொழிலே! கூடு
துறந்து தமிழ்ச்சோலை சுற்றறுத் தேனோ
பறந்தாய் மறைந்தாய் பகர்!
கானக்குயிலே! கனித்தமிழின் இன்சுவையே
மோனப் பெருந்துயிலின் மூழ்கியதேன்? -ஞானத்
திருவிளக்கே பாவுலகில் தேடினும் உன்போல்
ஒருவிளக் குண்டோவுரை!
பாட்டுத் திறத்தாலே பைந்தமிழைக் காக்கும் – மாங்
காட்டுக் குயிலரசே! காதலினால் – நாட்டிலுறு
கேடுகளைப் போக்கக் கிளர்ந்தெழும் உன்குரலைக்
கூடுமோ கேட்க இனிக் கூறு!
புரட்சிக் குயிலே! புவிமாந்தர் கொள்ளும்
மருட்சிதமைத் தீர்க்கும் மருந்தே – இருட்டிலா
விண்ணிற் பறந்ததனால் வெம்புமனமாந்தர் தம்
கண்ணீர்ப் பெருக்கினைக் காண்!

- குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்