தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் – Bharathidasan poem
தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்!
தமிழப் பகையாளனும் தானே பெயர்வான்! (தமிழ்)
தமிழுக்குத் தொண்டு
தரும்புலவோர்கள்
தமிழ்க்கனி மரத்தினைத்
தாங்கிடும் வேர்கள்!
கமழ்புது கருத்துக்குப்
பலபல துறைகள்
கற்றவர் வரவர
கவின்பெறும் முறைகள்! (தமிழ்)
எங்கும் எதிலுமே
தமிழமுதூட்டு
இங்கிலீசை இந்தியை
இடமிலா தோட்டு
திங்கள், செவ்வாய், புதன்
கோள்கட்குச் செல்வாய்
தேடரும் அறிவியல்
எண்ணங்கள் வெல்வாய்! (தமிழ்)
Comments
Post a Comment