Skip to main content

கவிக்குயில் எங்கே ? akaramuthala.in bharathidasan spl. issue

கவிக்குயில் எங்கே? – நாகை சு.இளவழகன்

bharathidasan08
புயல்போல பாட்டெழுதிச் சுழல வைத்தப்
புதுச்சேரிக் கவிக்குயிலே பறந்ததெங்கே?
இயற்கையெனும் கொடும்பாவிக் குரலைக் கேட்டோ
எழுந்தெம்மைப் பிரிந்தே நீ சென்றுவிட்டாய்
திரும்பாத பெரும்பயணம் சென்ற ஐயா
திருநாட்டை மறந்தாயோ? என்று காண்போம்.
அரும்பிவரும் தமிழுலகின் பொற்காலத்தை
அருகிருந்து பாராமல் எங்கே சென்றாய்?
அழுகின்ற எங்களையார் ஆற்ற வல்லார்?
அடுத்த பல தலைமுறைக்கும் வீர மூட்டித்
தொழுகின்ற நிலைபெற்றாய்; உன்னை இந்தத்
தொல்லுலகில் இனியென்று காண்போம் ஐயா
பாரதிக்கு தாசனென எழுந்த நீயோ
பைந்தமிழின் எதிரிகளை ஒடுக்கி வைத்தாய்
பாரதிரத் தமிழ்பாடி வந்தாய், இன்றோ
பாட்டெல்லாம் ஏட்டோடு நிறுத்திப்போனாய்!
மரையில்லாப் பொய்கையென தூய வெள்ள
மதியில்லா வானமெனத் தமிழர் நாடு
துரைநீயும் இல்லாமல் வாடுதய்யா
துடித்தெழுந்திக் குறையினையார் நீக்கவல்லார்?
- குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964
 
 
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்