அருட்பா திருக்குறட்பா - வெ.அரங்கராசன்
அருட்பா திருக்குறட்பா இலக்குவனார் திருவள்ளுவன் 27 ஏப்பிரல் 2014 கருத்திற்காக.. பேராசிரியர் வெ.அரங்கராசன் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி கோவிற்பட்டி- 628 502. கைப்பேசி: 98409 47998. குறும்பா, பெரும்பா, அரும்பா… அறம்பொருள் இன்பம், தரும்பா… விரும்பா தவரும், விரும்பும் நறும்பா, அருட்பா குறட்பா… எறும்பா உழைத்திட அரிவினைத் தரும்பா, பெரும்புகழ் பெரும்பா… இரும்பா இருப்போர் தமையும், கரும்பாக் கரைக்கும், குறட்பா… விருப்பா? வெறுப்பா? இரண்டையும் அறுப்பா, எனச்சொலும் திருப்பா… திறப்பா, படித்துப் பறப்பா… நெறிப்பா, குறிப்பா இருப்பா… அயிர்ப்பா, உரிப்பா, உயர்த்தும் உயிர்ப்பா, உரைப்பா, உணரப்பா… கோலப்பா, கொண்டு பாரப்பா… ஞாலப்பா, நாளும் ஓதப்பா… முன்பா பின்பா ஒப்பா நன்பா, இன்பா, மின்பா… அன்பா அறிவிக்கும் மன்பா… துன்பா? வன்பா? விடும்பா… கனிப்பா, தனிப்பா, குறள்போல் இனிப்பா எப்பா? புனிதப்பா… மனிதப்பா, அமுத மொழிப்பா… மணிப...