பாராட்டு – அரவிந்தன் சுமைதாங்கி சாம்பசிவம்
பாராட்டு
குறள் வெண்செந்துறை
பாராட்டை வேண்டாரும் உண்டோ உலகினில்
சீராட்டும் தாயையே வேண்டிடும் சேய்மை
மெச்சுதலைத் துச்சமாய் எண்ணினாலே நம்திறமை
உச்சத்தை எப்பொழுதும் காணாது காண்க
ஏற்பளிக்கும் போற்றுதலை நல்மனத்தில் நீவிதைத்தால்
நாற்றங்கால் நெல்மணியைத்
தந்திடுமே பார்!
நேர்மறையின் எண்ணமுடன்
தட்டிக் கொடுப்பதுவே
பார்போற்றும் பாராட்டாய்
நின்று பேசும்!
கலித்தாழிசை
மெச்சுதலும் முகத்துதியும்
சமமெனவே நினைப்பவரோ
தன்முனைப்பை ஆவணத்தைச்
சரிவரவே பிளந்தறியார்!
அரவிந்தன் சுமைதாங்கி சாம்பசிவம்
Comments
Post a Comment