மதி படைத்த யானை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
மதி படைத்த யானை
குள்ளநரிகள் கள்ளவெறியில் தேர்தல் மணியை அடிக்குதாம்,
குருட்டு மறிகள் அந்த ஒலியில் பழசையெல்லாம் மறக்குதாம்,
குருதி வெறியில் நரிகளோடு கழுதைப்புலிகள் சேருதாம்,
குற்றுயிராய்க் குலையுயிராய் மறிகள்சாகு மென்றறிந்து,
கொல்லும் அலகுக் கழுகுகளும் ஆசையோடு பறக்குதாம்!
உள்ளம் குமுறிக் கண்டவர்கள் என்னசொல்லித் தடுத்த போதும்,
உண்மை அறியும் ஆற்றலின்றி ஊனமறிகள் சிரிக்குதாம்!
மறிகளுக்கு அறிவையூட்டி, நல்வழியைக் காட்ட,
மதிபடைத்த யானைஒன்று, தரை நடுங்க வருகுதாம்!
தமிழ் நலம்பெருக்க வருகுதாம்!
தன் நலம்மறந்து வருகுதாம்!
தேர்தல் களம்வெல்ல வருகுதாம்!
சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
Comments
Post a Comment