7
7.ஆசிரியரை யடைதல்
- அறிவினைத் தருபவ ராமா சிரியர்.
அறிவினைத் தருகின்றவர் ஆசிரியர் ஆவார்.
- இருபா லாருந் தருவதற் குரியவர்.
ஆண், பெண் இருவரும் ஆசிரியர் ஆவதற்குத் தகுதி உடையவர்கள் ஆவர்.
- அறிவு வகையா னாசிரி யர்பலர்.
பல வகையான அறிவினை வழங்குவதற்கு ஏற்ப ஆசிரியர்களும் பல வகையாக உள்ளனர்.
- எவர்க்கு மொழுக்க மின்றியமை யாதது.
ஆசிரியர்களுக்கு நல்லொழுக்கம் இன்றியமையாதது.
- அவர்கடன் மாணவ ரறிதிற னறிதல்.
மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறமையை அறிந்து கொள்வது ஆசிரியரின் கடமை ஆகும்.
- நல்வினை விரும்பு நல்லவர்க் கோடல்.
ஆசிரியர் என்பவர் நல்ல செயல்களைச் செய்பவராகவும் நல்ல நல்லவர்களின் நட்பை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
- மாணவர் தமைதம் மகாரெனப் பேணல்.
ஆசிரியர் தமது மாணவர்களை தனது மக்களைப் போல் காக்க வேண்டும்.
- அறிந்தவை யெல்லாஞ் செறிந்திடச் சொல்லல்.
தாம் அறிந்தவற்றை எல்லாம் மாணவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லுதல் வேண்டும்.
- சொல்லிய செய்யவும் வல்லுந ராக்குதல்.
ஆசிரியர் மாணவர்களை, அவர்கள் அறிந்தவற்றைச் செயல்படுத்தும் வல்லவர்களாகச் செய்தல் வேண்டும்.
- அறிந்தா சிரியரை யடைந்தெலா மறிக.
எல்லாவற்றையும் அறிந்த, சிறந்த ஆசிரியரை அடைந்து எல்லாவற்றையும் கற்றல் வேண்டும்.
வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment