நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்!
ஒவ்வொரு முறையும் இம்முறை யாவது,
செவ்விய நல்லாட்சி அமையும் என்றெண்ணி,
இங்கொரு முறையும் அங்கொரு முறையும்,
அவ்விய வாக்கினை அளித்து ஏமாந்து,
கவ்விய இருளில் கலங்கும் தமிழா!
செந்தமி ழுணர்வுடன் தமிழர் ஒன்றாகி,
ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து வாக்கினை,
இம்முறை சரியாய் அளித்தால் உடனே,
நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்!
[நௌவிய = நவ்விய = அழகிய]
Comments
Post a Comment