தலைப்பு-இழந்ததை மீட்போம் :thalaippu_izhandhadhai_meetpoam_sachithanandham

விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்!

சடலம் ஆக்கிச் சிதைத்தானோ? ஐயோ!
சிதைத்துச் சடலம் ஆக்கினானோ?
சுவரில் அடித்த செம்மண் கலமாய்,
சிதறிக் கிடந்த உடல்கள் மீது,
சிறுநீர் கழித்தும் அடங்கா வெறியில்,
சிரங்களை அறுத்து ஒருபுறம் குவித்து,
சித்திரம் போன்ற நம்குலப் பெண்களின்,
செந்தமிழ் மார்பை அறுத்தானே! நீசன்,
செந்தமிழ் மார்பை அறுத்தானே! நாமும்
செய்வ தறியாது திகைத்தோமே!
சிதிலம் அடைந்த உயிர்கள் கண்டு,
விதியென் என்றொதுங்கி  வீழ்ந்திட மாட்டோம்,
உதிரம் கொதித்துத் தமிழன்னை அருளால்,
விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்!
சிறுவர், மழலையர் பேதங்கள் இன்றி,
சிலநூ றாயிரம் மக்களைக் கொன்று,
சுடலைக் காடாய் முள்ளி வாய்க்காலை,
சிங்களன் மாற்றிய கொடுமையை நாளும்,
சோற்றை அள்ளித் தின்னும் முன்னர்,
சிந்தனை செய்து சினமனம் வெடித்து,
செந்தமிழ் ஈழம் அமைப்போம் என்று,
சத்தியம் செய்து உயிர் வளர்ப்போமே,
சரித்திரம் படைக்க இணைந் துழைப்போமே!
சச்சிதானந்தன் தெய்வசிகாமணி :saccithanantham deivasikamani
சச்சிதானந்தம் தெய்வசிகாமணி