தலைப்பு-மை வைத்துப்பார்க்கும் மக்கள் : thalaipu_maivithu_venkataramvasi

மை வைத்துப்பார்க்கும் மக்கள்!

தேர்தல்
வெல்வது யார்
என்று தெரிய
மை வைத்துப்
பார்க்கும் மக்கள்.

*****
 காற்று வாக்கில் போயோ
நேர் வாக்கில் போயோ
குறுக்கு வாக்கில் போயோ
வாக்களியுங்கள்!
குருட்டு வாக்கில்
மட்டும் வேண்டா!
*****.
வாங்கிய வாக்குகள்
கொடுத்த வாக்குகளை
மறக்கடிக்கக் கூடாது!
*****
நேர்மை
வாய்மை
கடமை
உரிமை
வறுமை
கொடுமை
நன்மை
திறமை
செம்மை
மடமை . . .
போக்கச் சில மைகள் . . .
ஆக்கச் சில மைகள் . . .
ஒழிக்கச் சில மைகள் . . .
பன்மைகள் கலந்த
ஒரு மை இந்த
விரல் மை!
*****
கறை படாத கைகளைத்
தேர்ந்தெடுக்கக்
கறை படலாம் விரல்கள்!
*****
கறை நல்லது!.
சலவைத் தூளுக்கு மட்டுமல்ல. . .
மக்கள் வாழ்க்கைக்கும் தான்!

 வேங்கடராம்