வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 8. தன்னை யறிதல்
8
-
தன்னை யறிதல்
71.தன்னை யறித றலைப்படுங் கல்வி.
தன்னை அறிந்து கொள்வதே முதன்மையான கல்வி ஆகும்.- மனிதரி லுடம்பு மனமான் மாவுள.
- தோன்முதற் பலவின் றொகுதிகா ணுடம்பு.
- உடம்பெலா நிற்கு முயரறி வுரன்மனம்.
- உடம்பு மனமுமா ளுயரறி வான்மா.
- ஆன்மா மனமுட றான்றன் வலிதனு.
- மெய்ம்முத லியமனன் வெளிச்செலும் வாயில்.
- உடன்மனத் தின்பி னோடு மியலது.
- மனமற வறநெறி மருவு மியலது.
- ஆன்மா மனத்தை யறநெறி யுய்ப்பது.
வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment