வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! – வ.கோவிந்தசாமி
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை!
இந்தியச் சனநாயகத்தின்
இன்றியமையா வாழ்வுரிமை
வாக்குரிமை!
மக்களாட்சியின் மாசற்ற
மகத்தான செல்வம்
வாக்குரிமை!
அடிமை வாழ்வை எண்ணி – அதில்
கொடுமை நிலையெண்ணி
விடுதலை வேட்கையிலே – அன்று
வீரர் பலர் இருந்தனர் – அவர்கள்
நித்தம் நித்தம் தம்
நிலையை எண்ணி – தம்
சித்தம் கலங்கி நின்றார் – அன்று
சிந்தையில் துணிவு கொண்டார்.
யுத்தம் பல புரிந்து
இரத்தம் பலர் சொரிந்து
பெற்றது இந்தக் குடியரசு – அதை
நன்றே பேணும் புவியரசு.
மக்கள் தானென்று
மகான்கள் மனத்தில் கொண்டு
வகுத்துத் தந்ததுவே
வாக்குரிமை!
நாம் இந்த நாட்டின்
குடிமகன் என்பதற்கு
ஓர் ஆதாரம் வாக்குரிமை!
ஏர் பிடிக்கும் உழவாளி
தூறேடுக்கும் தொழிலாளி
வார் பிடிக்கும் நாட் கூலி
சேறு எடுக்கும் சிற்றாளும்
ஊராட்சி உறுப்பினராய்
ஊராளும் தலைவராய்
சட்டமன்ற உறுப்பினராய்
சட்டசபை மந்திரியாய்
பாராளுமன்ற உறுப்பினராய்
பாரதத் தலைமையராய்
ஆவதற்கு அச்சாணியே
வாக்குரிமை!
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை!
வாக்குரிமையே வாழ்வுரிமை!
வாழ்க சனநாயகம்! வாழ்க வாக்காளர் புகழ்!
– வ.கோவிந்தசாமி,
இளநிலை உதவியாளர்,
அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை.
Comments
Post a Comment