க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை
அகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. (க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 தொடர்ச்சி) தனித்தமிழைப் பேணச்சொல்லும் அண்ணலின் அறிவுரைக்கு ஈனர்கள் எதிருரை பகர்கின்றார்கள். தனித்தமிழ் நமக்குத் தேவையில்லை, அதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்ற தங்களது மறுப்பை முரட்டுத்தனமாக எடுத்துவைக்கின்றார்கள். சீற்றத்தில் கொந்தளிக்கின்றார் அண்ணல். அவரின் சொற்கள் ஒவ்வொன்றும் எறியப்பட்ட ஈட்டிகளாகப் பாய்கின்றன. நெஞ்சம் திறக்கின்றது. சொற்களின் வன்மையைப் பாருங்கள்: எண்ணங்கள் ஏதுமின்றி எதிர்ப்புக் கொள்கை ஏந்திமட்டும் முருட்டாகப் பேசி விட்டாய். கண்மூடித் தனமாகச் சொல்லி விட்டால் கால்முளைத்து நடந்திடுமா உன்றன் ஆற்றல். ——-...